'அந்த வரலாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படும்.. வேலுமணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கோவை: எந்த ஒரு தலைமைக்கு மன்னிக்கின்ற தன்மை, பெருந்தன்மை இல்லையோ , அந்த தலைமை நீடித்து நிலைக்கின்ற வரலாறு இல்லை எனவும், அந்த வரலாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படும் என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி வேலுமணி இடையே ஏற்பட்டு வரும் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,
முன்னால் ஞானத்தை எதிர்த்து போரிட முடியும், ஆனால் காலத்தை எதிர்த்து போரிட முடியாது, காலம் வைக்கின்ற புள்ளியை உங்களால் அழிக்க இயலாது, இதுதான் எடப்பாடிக்கு நடைபெறுகின்ற நிகழ்வு என தெரிவித்தார்.

Sengottaiyan Edappadi Palaniswami sp velumani

அதிமுகவில் ஒவ்வொருவராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற்றுகின்றார் என தெரிவித்த செங்கோட்டையன், எந்த ஒரு தலைமை மன்னிக்கின்ற தன்மை, பெருந்தன்மை இல்லையோ , அந்த தலைமை நீடித்து நிலைக்கின்ற வரலாறு இல்லை எனவும், அந்த வரலாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணத்தில் எஸ்.பி வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு, அது உறவு முறையில் இருவருக்கும் வேண்டிய திருமணம் எனவும்,
நானும் சென்றிருந்தேன், எஸ்பி வேலுமணி வந்திருந்தார் எனவும், எங்களது கழக நிர்வாகிகளும் வந்திருந்தார்கள், எல்லோருமே அங்கு அருகாமையில் அமர்ந்து இருந்தோம் என தெரிவித்தார். அது பொதுவாக வணக்கம் செலுத்தி விட்டு இருவரும் சும்மா அமர்ந்து கருத்துக்கள் பேசிக் கொண்டிருந்தோம், அரசியல் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜாக்பாட் அடித்து இந்த ஆட்சி வந்திருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ஜாக்பாட் அடித்தவர் யார் ? அதில் ஃபெயிலியர் ஆனவர் யார்? என்பது நாடு அறியும் எனவும், திமுகவுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்க பார்த்தார் ஆனால் முகம் கிழிக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்

அனிருத் திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை பல்வேறு நிலைகளை எடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்பது எனவும், நூற்றுக்கணக்கான நீக்கும் அதிகாரம் இருக்கிறது என எடப்பாடி சொல்கிறார், ஆனால் எல்லோராலும் உருவாக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்பதை மறந்து விடுகிறார் என தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா என்பது வேறு, எடப்பாடி பழனிச்சாமி என்பது வேறு , இதை அவர் புரிந்து கொண்டால் சரி எனவும் தெரிவித்தார்.

அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் ஒருவர் தான் வேலுமணி என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு, 2 கோடி தொண்டர்கள் என சொன்னால்,
அதில் முக்கிய பொறுப்பாளர் தான் வேலுமணி எனவும், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராகவும் முதலமைச்சராகவும் ஆக்குவதற்கு உறுதுணையாக இருந்தார் எனவும் தெரிவித்தார். காலம் அவருக்கு (எடப்பாடி) பதில் சொல்லும் எனவும் தெரிவித்தார்.

எஸ்.பி வேலுமணியின் செல்வாக்கை குறைக்கும் விதமாக எடப்பாடி அப்படி பேசினாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், யாரையும் யாராலும் குறைத்து விட முடியாது என பதில் அளித்தார். கொங்கு மண்டலம் இப்பொழுது யாரிடம் இருக்கின்றது என தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,
தவெக தலைமையில் கொங்கு மண்டலம் இப்பொழுது இருக்கிறது எனவும், தனித்து ஒரு இயக்கம் போட்டியிட்டு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

கொங்கு மண்டலம் இனி எதிர்காலத்தில் வெற்றி தளபதி தலைமையில் தான் பவனி வரும் எனவும்,எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடி பார்க்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+