நேபாள இளைஞர் புரட்சிக்கு பிறகு.. நேராக இந்தியா வந்த பிரதமர் பலேந்திர ஷா! மோடியுடன் முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாள பிரதமராக உள்ள பலேந்திர ஷா முதல்முறையாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, நேபாள பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்!

இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடு நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் இந்தியாவுக்கு முக்கியமான நட்பு நாடாகவும் இருக்கிறது. அங்கு சமீபத்தில் தான் இளைஞர்கள் போராட்டம் நடந்து ஆட்சி மாற்றமும் கூட ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பலேந்திர ஷா வென்று பிரதமராக பதவியேற்றிருந்தார்.

Nepal Prime Minister Visits India Nepal India

வங்கதேச பிரதமர்

இந்த சூழலில் நேபாள பிரதமர் பலேந்திர ஷா இப்போது முதல்முறையாக அரசு முறையை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மரியாதை தரப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா - நேபாளம் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் ரயில், விமான இணைப்புகளை விரிவுபடுத்துவது, எரிசக்தி, உள்கட்டமைப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

முக்கிய ஆலோசனை

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கல்வி, சுகாதாரம், விவசாயம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின்போது உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி பகுதியையும் நேபாளத்தின் ஜனக்பூர் தாமையும் இணைக்கும் சரயு - கமலா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவை வீடியோ மூலம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. உத்தராகண்டின் பனபாசா பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியைத் திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

நிவாரணம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்தன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து மறுகட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் 2 பில்லியன் டாலர் வரையிலான மேம்பாட்டு உதவித்தொகையை வழங்குவது குறித்தும் இந்தியா ஆலோசித்து வருகிறது. அது குறித்தும் இந்த பயணத்தில் ஆலோசிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீர்மின் உற்பத்தி மற்றும் எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன. முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் நேபாளம் - இந்தியா வர்த்தக மன்ற கூட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக நேபாள நிதியமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே, வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல், தலைமை ஆலோசகர் குமார் பியஞ்சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் பலேந்திர ஷாவுடன் வந்துள்ளது.

மரியாதை செலுத்தினார்

முன்னதாக, இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பலேந்திர ஷா, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்த அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேசினார். தனது இரண்டு நாள் பயணத்தின் நிறைவாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் சந்திக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+