அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மகர ராசிக்கு புது வேலை, நிலம், சொத்து.. ஜாக்பாட் கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-magaram-people-get-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. மகரம் ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். மகரம் என்பது சனி வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். எல்லா காரியங்களிலும் ஜெயிக்கக்கூடிய காலகட்டம். எதை செய்தாலும் வெள்ளிக்கிழமை செய்வது யோகத்தைத் தரும். வெள்ளை, பச்சை நிற ஆடைகளை உடைத்துவது நன்மை, வெற்றியைத் தரும். நம்பிக்கை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. 25, 26 ஆகிய 2 நாள்கள் மட்டும் மன நிம்மதியின்மை, அதிக செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

முன்னேற்றம்

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும். செய்யும் விஷயங்கள் தள்ளிப்போய் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் இரு நாட்கள் மட்டும் கவனம் தேவை. மற்றபடி வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவராக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கு யோகம் ஏற்படும.

முயற்சியில் வெற்றி

எந்த முயற்சி செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை நன்றாகப் புரிந்து கொண்டு வேலை செய்தால் அற்புதமாக இருக்கும். லாபத்தில் அமர்ந்திருக்கும் சூரியனால் அரசு மூலமாக வரக்கூடிய சொத்துகள் வந்து சேரும். பணம் வந்து சேரும். எல்லாமே வரும் ஆனால் கொஞ்சம் தள்ளிப்போய் வரும். அடிவயிறு, கழிவுப் பாதை, இரவு நேரத்தில் உணவு சாப்பிடுவதால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

செல்வாக்கு

யோக பலன்களை பெறக்கூடிய காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் யோகங்களைப் பெறக்கூடிய அமைப்பு. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் பெரும் செல்வாக்கை பெறக்கூடிய காலகட்டம். வீடியோ கேம், சோஷியல் மீடியாவில் அடிமையாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. தூக்கமில்லாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

நிலம் வாங்கும் யோகம்

வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் பெறும் அமைப்பு. கடல், நீர்மாக்கம் அருகில் இருக்கும் இடங்களை வாங்கும் அமைப்பு உள்ளது. ஆறு, குட்டை, ஏரி, டேம் இருக்கும் பகுதிகளில் இடங்கள் விற்பனைக்கு வந்தால் வாங்கி வைத்துக் கொள்வது பெரும் செல்வாக்கையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

வழிபாடு

ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஜீரண உறுப்புகள், கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு பெரும் செல்வாக்கைத் தரும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+