கும்ப ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. அரசு வேலை கிடைக்கும்.. சொந்த வீடு கனவு நனவாகும்
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. கும்பம் ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். கும்பம் என்பது சனி வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற யோகம் ஏற்படும். பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் வரும் பஞ்சாயத்துக்கள் வரக்கூடிய டிசம்பர் 5 ஆம் தேதி முதல் மாறும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பாக்கிய ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. லட்சுமி நாராயணப் பெருமாள், அரங்காநதர் தாயார், ரங்கநாயகி அம்மாள் வழிபாடு அற்புதமான மாற்றத்தைத் தரும்.
அரசு வேலை
10 ஆம் இடம் சிறப்பாக இருக்கிறது. வேலையில் சிறிய சிறிய பிரச்சனைகள், அவமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் கொடுக்காது. நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மெடிஷன் சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்வீர்கள். கல், கட்டுமானம், குவாரி, மணல், கட்டுமானம் செய்வது, அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது.
கவனம்
7 ஆம் இடம் வலுவிழந்து காணப்படுவதால் கெமிக்கல், ஆசிட், பினாயில், அகர்பத்தி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சிறு தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் ஏற்படும். வெளியிடம், குடும்பத்தில் வாக்கு கொடுக்காமல் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
யோகம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பண வரவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் 72 வயது வரை யோகங்களைப் பெறக்கூடிய ராசி கும்ப ராசி. வேற்று மொழி மனிதர்களால் யோகம் ஏற்படும். எல்லா விதமான பயணங்களையும் மேற்கொள்வீர்கள். ஞானமார்க்க பயணங்கள், தெய்வ வழிபாடுகள் அனுகூலத்தை ஏற்படுத்தித் தரும்.
வழிபாடு
சிவபெருமான் வழிபாடு, சிவனுக்கு அபிஷேகம் செய்வது யோகத்தைத் தரும். கழுத்து வலி, கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. துணையின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நன்மையைத் தரும். வண்டி வாகனங்களை மாற்றக்கூடிய யோகம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும். பூவராகப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
