தீபமேற்ற சொன்னால் விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? கோர்ட் சொல்லியும் மறுக்கிறீங்க: நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால் விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? என்று கேள்வி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள நயினார், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் முதல்வர் விஜய்யையும் நேரடியாகவே கேள்வி கேட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால், விஜய் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது, உச்ச நீதிமன்ற உத்தரவை, "மறு ஆய்வு" கோரி மனு தாக்கல் செய்திருக்கும் தவெக அரசின் இந்து விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு, விஜய் ஏன் இத்தனை பதறுகிறார்? உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, பிற அமைப்புகள் எல்லாம் அமைதி காக்கையில், தவெக அரசு மட்டும் எதற்கு இப்படி முந்திக் கொண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது?

Vijay

சிக்கந்தர் மலையாக மாற்ற துடிக்குதா

கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறையே, கந்தர் மலையை "சிக்கந்தர்" மலையாக மாற்ற துடிக்கிறதா, வாக்கு வங்கி அரசியலுக்காக விஜய் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா? முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் விஜய்க்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.

அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக் கொண்டு, வழிபாட்டு உரிமைகளைத் திட்டமிட்டு பறிக்கும் விஜய்யின் தலைமையிலான இந்து விரோத அரசுக்கு, முருக பக்தர்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், நயினாரின் விமர்சனம் இத்துடன் நின்றுவிடவில்லை,.. கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அப்போது திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நயினார் நாகேந்திரன் சீற்றம்

"திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது எல்லா மக்களின் கோரிக்கை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தீபம் ஏற்ற அறிவுறுத்தியும் அரசு மறுக்கிறது. இந்த பிரச்சனையில் முதல்வருக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இது தீபத் தூண் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறார்கள்.

1923ம் ஆண்டு முதல் வழக்கு ஆரம்பித்து, இந்த வழக்கில் பல்வேறு தீப்புகளில் நீதிபதிகள் அதே தீர்பை உறுதி செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் அதை உறுது செய்துள்ளது. தலைமை நீதிமன்றம் சொல்லியும் ஏன் ஏற்க மறுக்கறீங்க? தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சனை? பல்வேறு இந்து கோவிலுக்கு செல்வது பகல் வேஷசமா?

ஒட்டுமொத்த இந்துக்களின் விரோதி

தவெகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்கிறீர்கள் முதல்வர், சட்டம் ஒழுங்கு, போதை பொருள் புழக்கம் போன்றவற்றை தடுக்காமல் முழுக்க முழுக்க தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.

காவிரி தண்ணீர் பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நாளை திருக்கார்த்திகை சொக்கப்பனை கொளுத்துவது, தீபம் ஏற்றுவது போன்றவை தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், வீடுகளில் விளக்கு ஏற்றுவது ஐதீகம். இந்த ஆண்டு ஏற்றுங்கள், அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளளாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும், முதல்வர் மறைக்கிறார், மறுக்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். விரைவில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்" என்றெல்லாம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சீராய்வு மனு

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதைத்தான் நயினார் நாகேந்திரன் தனது பேட்டியிலும் எக்ஸ் பதிவிலும் விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய் வேல் பிடிப்பது, கோயில்களுக்கு செல்வது போன்றவற்றை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள அவர், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமை தொடர்பாகவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

"வேல் புடிக்குறீங்க, மூகாம்பிகை கோவிலுக்கு போறீங்க இதெல்லாம் பகல் வேஷமா.? யாரை காப்பாற்ற நினைக்கிறீங்க? முழுக்க முழுக்க தவறு செய்கிறீர்கள் இதன் விளைவு மிக மோசமாக இருக்கும்" என்று பகிரங்கமாகவே தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை தந்து வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+