டாஸ்மாக் கடைகளில் ரூ.1000க்கு மேல் மதுபானம் வாங்க ஜிபே கட்டாயம்.. சர்வர் டவுன் ஆனால் என்ன செய்வது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேலான விற்​பனை தொகையை டிஜிட்​டல் பரிவர்த்​தனை மூலம் மட்​டுமே பெறும் நடை​முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம் என்ற நடைமுறையால் டாஸ்மாக்கில் சர்வர் டவுன் ஆனால் எப்படி மதுபானம் வாங்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைத் தொகை ரொக்கப் பணம், யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு ஸ்வைப் ஆகிய முறை​களில் பெறப்​பட்டு​ வருகின்​றன. எனினும் விற்​பனைத் தொகை​யின் பெரும்​பகுதி ரொக்​க​மாகவே பெறப்​படு​கிறது. இதை கையாள்வதில் பணியாளர்களுக்கு பல சிரமங்கள் உள்​ளன.

TASMAC

இந்​நிலை​யில், டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேலான விற்​பனை தொகையை டிஜிட்​டல் பரிவர்த்​தனை மூலம் மட்​டுமே பெறவேண்டும் நடை​முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. சென்னை மண்​டலம், திரு​வள்​ளூர் கிழக்கு மாவட்​டங்​களில் இன்று முதல் இந்த முறை அமல்​படுத்​தப்​படுவதாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் இருந்து வருகின்றன. இதைக் களையும் விதமாக அனைத்துக் கடைகளிலும் QR கோடு மற்றும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையை இன்னும் 'டைட்' ஆக்கும் முயற்சியாக ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கும்போது ரொக்கப் பணம் பெறப்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதைத் தடுக்கவும், கள்ளச்சந்தை மற்றும் கணக்கில் வராத பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.

தற்போது, சில நேரங்களில் சர்வர் முடக்கம் போன்ற பிரச்சனைகள் நிகழ்கின்றன. யுபிஐ பணப் பரிவர்த்தனை அவ்வப்போது சிக்கல்களைச் சந்திக்கும். அப்படி, டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 1,000க்கு மேல் மதுபானம் வாங்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை உச்சத்தில் இருக்கும். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும்போது வங்கி சர்வர்கள் முடங்குவது நடக்கும். பணம் நமது அக்கவுன்டில் கழிந்தும் பெறப்படுபவருக்கு போய்ச் சேராமல் பெண்டிங் நிலையில் இருப்பதும் நடக்கும். இதனால் கடை விற்பனையாளருக்கும், குடிமகன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும்.

கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் போதிய மொபைல் சிக்னல் இருப்பதில்லை. டாஸ்மாக் கடைகளுக்குள்ளும் முறையான வைஃபை வசதி இல்லாத சூழலில், ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது பெரும் சவாலாக மாறும் எனக் கூறப்படுகிறது.

தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்கள் பலர் இன்றும் சாதாரண பட்டன் போன்களையே பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் ரொக்கப் பணம் மட்டுமே இருக்கும் நிலையில், ரூ.1,000-க்கு மேல் மதுபானங்களை வாங்க டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம் என்றால், அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

ரூ.1,000-க்கு மேல் வாங்கும்போது மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம் என்பதால், விற்பனையாளர்கள், ரூ.1,000-க்குக் குறைவான தனித்தனி பில்களாகப் பிரித்து ரொக்கப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். இது அரசின் முயற்சியையை ஒட்டுமொத்தமாக கேள்விக்கு உள்ளாக்குவதாக அமையும். விற்பனையாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

இணைய வேகம் குறைவாக இருக்கும் இடங்களில் இந்த விதிகளைச் செயல்படுத்துவதில் தளர்வுகளை அளிக்க வேண்டும் என்றும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தடையற்ற அதிவேக இணைய வசதியையும், ஸ்வைப்பிங் இயந்திரங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், சர்வர் முடக்கம் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+