கோத்ரா ரயில் எரிப்பு.. "17 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்!" ஆயுள் கைதிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான இர்பான் சிராஜ் படோ காஞ்சிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள தீவிர இதய பாதிப்பு கருத்தில் கொண்டும் ஏற்கெனவே 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டும் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. அங்குள்ள ரயில் பெட்டிகளில் சிலர் தீ வைத்த நிலையில், அது பிறகு மிக பெரிய கலவரமாக மாறி, குஜராத் முழுமையாக பரவியது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தான் இப்போது நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Godhra Train Burning Case

ஜாமீன்

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளது.. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 2011ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் இந்த இர்பான் சிராஜும் ஒருவர்.

பின்னணி

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, அயோத்தியில் இருந்து திரும்பி கொண்டிருந்த கரசேவகர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் கோத்ரா பகுதியில் தீ ஏற்பட்டது. இதில் கரசேவகர்கள் உட்பட 58 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தன. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் அல்லது மாயமாகினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரண தண்டனையும், இர்பான் சிராஜ் காஞ்சி உள்ளிட்ட 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது.

நீதிமன்றம்

இந்த தீர்ப்பை எதிர்த்து 2018ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே இந்த வழக்கில் தண்டனை பெற்ற பலருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த மற்றொரு குற்றவாளிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

உத்தரவு

இதற்கிடையே முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி இர்பான் சிராஜ் காஞ்சி அளித்த மனுவை பரிசீலிக்க குஜராத் அரசுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டு அவருக்கு இடைக்கால பரோல் வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான் தற்போது அவரது இதய பாதிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசத்தை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+