மகளுக்காக நடிகர் அர்ஜுன் கொடுத்த புகார் எதிரொலி.. பயில்வான் ரங்கநாதனிடம் போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாக்களில் ஆக்சன் காட்சிகளில் எதிரிகளை துவம்சம் செய்யும் அர்ஜுனை பார்த்திருப்போம். ஆனால் இப்போது தனது மகள் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் நடவடிக்கைதான் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. மகள் ஐஸ்வர்யா குறித்து சோசியல் மீடியாவில் சிலர் தனிப்பட்ட விமர்சனங்களையும், ஆதாரமற்ற தகவல்களையும் பரப்பி வந்த நிலையில், அதை அப்படியே விட்டுவிடாமல் நேரடியாக போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து நடிகரும், யூடியூப்பருமான பயில்வான் ரங்கநாதனிடம் இன்று போலீசார் நேரில் விசாரணை நடத்தி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Arjun

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தை இரண்டு குடும்பத்தினரும் பெரிதாக நடத்தி இருந்தனர். சமீபத்தில் அர்ஜுனின் 2வது மகள் திருமணமும் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஐஸ்வர்யா தனியாக கலந்து கொண்டார். உமாபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது சோசியல் மீடியாவில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சிலர் எல்லை மீறி பேச தொடங்கி விட்டனர். அதிலும் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக ஆதாரமற்ற குற்ற சாட்டுகள் பரப்பி இருந்தனர். இதை பர்த்து கோபமான அர்ஜுன் கடந்த நவம்பர் 19ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

Arjun

நடிகர் அர்ஜுன் கொடுத்த புகார்

அதில், "என் தனது மகள் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னுடைய மகள் மதுவுக்கு அடிமை ஆகிவிட்டாள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பவர்களை விசாரித்து, அவர்களை இப்படி பேச சொன்னது யார் என்று தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். அது குறித்து அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இந்த புகாரின் தொடர்ச்சியாக யூடியூபர் பயில்வான் ரங்கநாதனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

பயில்வான் ரங்கநாதனிடம் விசாரணை

அதன்படி, இன்று (நவம்பர் 23) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராகி இருக்கிறார். அங்கு சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி இந்த விவகாரம் தொடர்பாக அவரது விளக்கத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

மக்கள் பாராட்டு

அர்ஜுன் தனது மகளுக்காக புகார் கொடுத்திருப்பததை பலரும் பாராட்டி வருகின்றனர். போலீஸ் விசாரணை தற்போது நடைபெற்றுள்ள நிலையில், இந்த விவாகரத்தில் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மகள் பற்றி தவறாக தகவல்களை பரப்புவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காமல் தந்தையாக அர்ஜுன் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பது தான் இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+