விஜய்க்கு போட்டியாக சங்கீதாவின் டிசைனர் உடை.. பார்க்க ரொம்ப சிம்பிள்.. விலை மட்டும் இவ்வளவா?
சென்னை: அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் வந்தது, ரஜினி- அஜித் சந்திப்பு, சிம்பு - நயன்தாரா பேசிக் கொண்டது என ஒவ்வொரு விஷயமாக இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தாலும், இருவரும் ஜோடியாக வராதது பல ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இப்போ அந்த வருத்தத்தையும் தாண்டி இருவரும் அணிந்திருந்த உடைகளின் விவரம் தான் புதிதாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது நேவி ப்ளூ நிற சூட்டில் மிகவும் கம்பீரமாக இருந்தார். அவருடைய டிரஸ்ஸோட விலை 3.67 லட்சத்திற்கும் அதிகம் என்று தகவல் வெளியானது. முதலமைச்சர் ஆகவும் சினிமாவில் பல வருஷங்களாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகராகவும் இருக்கும் விஜய், பொது நிகழ்ச்சிகளில் என்ன உடை அணிகிறார்? என்பதையே ரசிகர்கள் தனியாக கவனிக்கிறார். இந்த முறை அவருடைய கோட் சூட் இணையத்தில் பேசப்பட்டது.

முதல்வர் விஜய் உடை விலை
விஜய்யை தொடர்ந்து தனியாக வந்த சங்கீதா அணிந்திருந்த மஞ்சள் நிற உடை பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. அதிக ஆடம்பரம் இல்லாமல் லைட்டான மேக்கப், ஓபன் ஹேர், மஞ்சள் நிற குர்தா என அழகாக வந்திருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஒரு திருமண வரவேற்ப்புக்கு இவ்வளவு சிம்பிளாக வந்திருக்கிறாரே என்று நினைத்திருக்கலாம். ஆனால் அந்த உடையின் விலை விபரம் வெளியான பிறகுதான் பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.
சங்கீதா உடையின் விலை
அதாவது சங்கீதா அணிந்து இருந்தது ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல டிசைனர் நீட்டி தோலியா வடிவமைத்த மஞ்சள் நிற குர்தா செட் என்று கூறப்படுகிறது. இரண்டு அடுக்கு வடிவமைப்பில் சில்க் துணியில் டோரி மற்றும் கோட்டா எம்பிரய்டரி வேலைபாடுகளுடன் இந்த உடை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் முழுக்க ஆரி டிசைனும் கைகளாலே போடப்பட்டிருக்கிறது. அதற்கு மேட்ச் ஆக ஐவரின் நிற ஆர்கன்சா துப்பட்டாவும் அணிந்து இருந்தார். பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அந்த உடையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் அனைத்தும் ஸ்பெஷலானவை.
இந்த டிசைனர் உடையின் விலை மட்டும் 1.35 லட்சம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள் விஜய் அணிந்திருந்த கோட் 3 லட்சத்துக்கு மேல் என்றால் சங்கீதாவின் உடையும் ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறதே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் ஒரு உடையை பார்த்து முதலில் அதன் விலையை யாரும் கணிக்க முடியாது என்பதற்கு சங்கீதாவின் இந்த உடையே ஒரு உதாரணம். சாதாரணமாக தெரிந்த மஞ்சள் நிற குர்தா செட்டின் விலை 1.35 லட்சம் என்ற தகவல் வெளியானதும், பார்க்க சிம்பிளாக இருக்கு விலை இவ்வளவா? என்று பலர் ஆச்சரியப்பட்டு கமெண்ட்ஸ் கொடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
