பிக்பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு! விருகம்பாக்கம் வீட்டுக்கு பூட்டு! போன் ஸ்விட்ச் ஆப்! போலீஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக இன்ஸ்டா இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்ஸ்டா பிரபலம், முத்துக்குமரன் மீது அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அப்பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சம்மன் அளிக்க சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து முத்துக்குமரனின் செல்போன் எண்ணுக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

Biggboss Muthukumaran

முத்துக்குமரன் காவல்நிலையத்தில் விளக்கம் அளிக்க வருகிறாரா இல்லை சம்மன் பெறுகிறாரா என்பதை இரு தினங்களுக்கு பொறுத்திருந்து பார்த்துவிட்டு அப்படியும் அவர் வராவிட்டால் அவரது செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை அமைத்து தேடப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டா பிரபலம் ஒருவர் நேரில் சென்ற புகார் மனுவை அளித்திருந்தார். அதில் , பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் மனுவின் அடிப்படையில் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புகாரின் பேரில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69-இன் கீழ் முத்துக்குமரன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த ஏமாற்று விவகாரம் தொடர்பாக அந்த பெண் ஏற்கெனவே சமூகவலைதளங்களில் முத்துக்குமரன் தன்னுடன் உறவு வைத்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளத்தில் அந்த இன்ஸ்டா பெண் அளித்த குற்றச்சாட்டுகளை பிக்பாஸ் முத்துக்குமரன் மறுத்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது: நான் அந்த பெண்ணுடன் நட்பாகவே பழகினேன். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார் என கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் எதிர் புகார் அளித்திருந்தார்.

முத்துக்குமரன் அளித்த புகாரை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீஸார் அதில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை, தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்று முத்துக்குமரனுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.

யார் இந்த முத்துக்குமரன்?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். "நான் முத்துக்குமரன்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்து இவரது வீடியோக்கள் பலரை ஈர்த்துள்ளன.

சிறந்த மேடை, பட்டிமன்ற பேச்சாளராகவும் அறியப்படுகிறார். இவர் விஜய் தொலைகாட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+