ஆசியாவில் பவர் சென்டராக உருவெடுத்த இந்தியா! சீனா சீனில் இல்லை.. வெளியான முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட், 2026ம் ஆண்டுக்கான ஆசியா பவர் இன்டெக்ஸ் தரவரிசையை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2018க்கு பிறகு சீனாவுடனான ஒட்டுமொத்த அதிகார இடைவெளியை சீனா மிகக் குறைந்த அளவுக்கு குறைத்திருக்கிறது என்பதுதான். இந்தியாவுக்கு 100க்கு 40.5 புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியெனில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் இருக்கிறது.

India Asia Power Index

2018ல் இக்குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா-சீனா இடையிலான இடைவெளி இப்போதுதான் மிக குறைவாக உள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த மதிப்பீட்டில்.. சீனா இந்தியாவை விட 80% அதிக வலிமையுடன் உள்ளது. இருப்பினும் ராஜதந்திர செல்வாக்கு என்கிற அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் செல்வாக்கு மிக வலுவானதாக இருக்கிறது. இந்த பிரிவில் நமக்கு மொத்தம் 70.3 புள்ளிகள் இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கான மதிப்பீடு கணிசமாக உயர்ந்து.. சீன அதிபருக்கு பிறகு அடுத்தபடியாக இரண்டாவது மிகச் சிறந்த தலைவராக மோடி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த காலங்களில், நாம் அதிக அளவில் பாதுகாப்புத் துறை சார்ந்து ஏற்றுமதிகளை உயர்த்தி இருக்கிறோம். குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்து இருக்கிறோம். இதனால் இந்தியாவின் பாதுகாப்பு வலையமைப்புகள் பிரிவு, 18.6 புள்ளிகள் உடன் இரண்டு இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்திருக்கிறது.

பொருளாதாரம் மற்றும் எதிர்கால வளங்கள் பிரிவை பொறுத்தவரை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததால்.. பொருளாதார திறன் பிரிவில் 26.4 புள்ளிகளாக சற்று குறைந்தாலும்.. இந்தியா 3வது இடத்திலேயே நீடிக்கிறது. அதே சமயம் எதிர்கால பலன்கள் என்கிற பிரிவில் இந்தியா 56.2 புள்ளிகளை பெற்று முன்னேறி இருக்கிறது.

அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், ஈரான் உடனான மோதல் மற்றும் வெளியுறவுத்துறை கொள்கை முடிவுகள் காரணமாக வெளியுறவு விஷயத்தில் புள்ளிகள் 78.9 ஆக சரிந்துள்ளன. இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இடைவெளி வரலாறு காணாத அளவுக்கு வெறும் 5.3 புள்ளிகளாக குறைந்துள்ளன.

என்னதான் இந்தியா 3வது இடத்தில் இருந்தாலும் கூட.. புவிசார் அரசியல் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு வியூகங்களின் அடிப்படையில் பார்த்தால் ஆசியாவில் சீனாவின் வேகமான ஆதிக்கத்தை கவுண்டர் பேலன்ஸ் செய்ய.. அதாவது சமநிலை செய்ய அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமாகும். எனவே தான் இந்தியா பவர் சென்டர் ஆக இருக்கிறது.

ஈரான் மோதல் மற்றும் வெளியுறவுத்துறை கொள்கைகளால்.. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு சற்று சரிந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த வெற்றிடத்தை சீனா முழுமையாக நிரப்பி கொள்ளாமல் தடுக்க, ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்த குவாட் அமைப்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+