ஆசியாவில் வெடிக்கும் புதிய போர்? மாறி மாறி தாக்குதல்.. சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கும் டிரம்ப்
ஜகார்த்தா: இரு முக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் வெடித்துள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மோதல்கள் தொடர்கிறது. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இரு முக்கிய நாடுகள் தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாகவே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதலும் ஏற்படும். அந்த இரு நாடுகளுக்கும் இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

வெடிக்கும் போர்?
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்களுக்கு இரு தரப்புமே மாறி மாறி பரஸ்பரம் சாட்டி வருகிறது. இரு நாடுகளும் இப்படி மோதிக் கொள்வதால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்போகிறார்கள். தாக்குதல்கள் தொடர்வதால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இது தொடர்பாக தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சுரசந்த் கொங்சிங் கூறுகையில், "ஏழு மாகாணங்களில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் வெளியேற்ற வேண்டியிருந்தது" என்று அவர் தெரிவித்தார். அதேபோல கம்போடியா நாட்டிலும் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கம்போடிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாலி சோசெட்டா தெரிவித்துள்ளார்.
மாறி மாறி குற்றச்சாட்டு
கம்போடியா ராணுவம் பொதுமக்கள் இருக்கும் இடங்களைக் குறிவைத்துத் தாக்குவதாக தாய்லாந்து கூறியுள்ளது. இன்று காலை கம்போடியாவின் ராக்கெட் சுரினில் உள்ள பணோம் டோங் ரக் மருத்துவமனை அருகே விழுந்ததாகவும் இதனால் நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் கூட பதுங்கு குழிகளில் தஞ்சம் புக வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.
பதிலுக்கு கம்போடியாவும் தாய்லாந்து மீது குற்றஞ்சாட்டியுள்ளது. தாய்லாந்தின் F-16 போர் விமானங்கள் கம்போடியாவில் இரண்டு பகுதிகளைத் தாக்கியதாகவும், மூன்று பகுதிகளில் ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் கம்போடியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த மோதலில் F-16 போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதை தாய்லாந்தும் உறுதி செய்துள்ளது. இந்த மோதல் போராக வெடிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அமெரிக்கா
இதற்கிடையே வழக்கம் போல அமெரிக்கா இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து இருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு இது தொடர்பாக பேசிய டிரம்ப், "நான் ஏற்கனவே பல போர்களை நிறுத்தியுள்ளேன்.. இந்தியா பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான் போன்ற பல போர்களை நான் தான் நிறுத்தினேன். இப்போது தென்கிழக்கு ஆசியாவில் புதிதாக மோதல் தொடங்கி இருக்கிறது. நாளை இது தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் பேசவுள்ளேன். அந்த ஒரு போன் அழைப்பு மூலம் இந்த போரை நிறுத்துவேன்" என்று அவர் கூறினார்.
பின்னணி
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே 100+ ஆண்டுகளாக எல்லை விவகாரத்தில் மோதல் இருக்கிறது. பண்டைய கோயில்கள் அமைந்துள்ள ப்ரியா விஹார் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகவே இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications