பத்திரிக்கையாளர் விஜயனுக்கு என்ன நடந்தது.. புதிய தலைமுறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் எழுதியுள்ள கட்டுரையில், பத்திரிக்கையாளர் விஜயனுக்கு என்ன நடந்தது என்று விளக்கி உள்ளார். இரவு 12 மணி வரை நடந்த விசாரணையின் முடிவில் விஜயனிடம் வேறு விஷயங்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்த விசாரணை அதிகாரி நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் மறுநாள் நடந்த விவகாரம் தான் சிக்கலுக்கு காரணம் என்று சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் எழுதியுள்ள கட்டுரையில் கூறுகையில், தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான நெறியாளர்களில் ஒருவரான விஜயன், எந்த ஒரு சார்பு நிலையிலும் இல்லாமல், விவாதங்களை நடத்தி வந்தவர். கருத்துக்கணிப்புகளை நடத்தி வந்த திருநாவுக்கரசு என்பவர் தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகராக விவாதங்களில் பங்கேற்று வந்திருக்கிறார். எல்லா தொலைக்காட்சிகளுக்கும் வருவது போல் 'புதிய தலைமுறை' நிகழ்ச்சிகளுக்கும் வந்து சென்றார். அப்படி வரும் விருந்தினர்களுடன் தொழில்நிமித்த உறவு பத்திரிகையாளர்களுக்கு இருக்கும்.

அப்படியான ஓர் உறவையே திருநாவுக்கரசுடன் விஜயனுக்கும் இருந்தது. அப்படியான உறவில் தான், அவ்வப்போது தன்னுடைய கருத்துகள், கணிப்புகளை விஜயனின் வாட்ஸப்புக்கும் திருநாவுக்கரசு அனுப்பியிருக்கிறார்.

Puthiya Thalaimurai editor Samas explains what happened to journalist Vijayan

ஒரு நாள் திருநாவுக்கரசு, தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை விஜயனுக்கு அனுப்பி உள்ளார் திருநாவுக்கரசு. அப்படியா, என்று கேட்ட விஜயன், அன்று நேர்பட பேசு நிகழ்ச்சிக்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில் எல்லோரிடமும் இதுபற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார் விஜயன். "என்னமோ நடக்குது சார்" என்றார்.

தவெக ஆட்சி உருவான நாள் முதல் இத்தகு பேச்சுகள் நாலாபக்கமும் சிறகடிப்பதால், யாருமே இதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவே கிடையாது. அடுத்த சில நாடகளில் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். "என்னதான் நடக்கிறது என்றே புரியவில்லையே!" என்று பேசிவந்தோம்.

இத்தகு சூழலில்தான் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக சாட்சியாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று விஜயனுக்கு காவல் துறை சம்மன் தந்தது. அதனை அலுவலக கவனத்துக்கு விஜயன் கொண்டுவந்தார்.

இத்தகு சாட்சி விசாரணை அந்த வழக்குக்கு அவசியமானதாக இருக்கக் கூடும் என்று சொல்லி முழு ஒத்துழைப்பையும் வழங்க புதிய தலைமுறை அலுவலகத்தில் முடிவெடுத்தோம். சம்மனை வாங்கிக்கொண்ட விஜயன், அன்றைக்கு திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியைக்கூட ரத்துசெய்துவிட்டு, இரவே காவல் நிலையம் சென்றார் சந்தித்தார். உடன் அலுவலக நண்பர்கள், வழக்கறிஞர் சென்றார்கள்.

திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்கள் எல்லாவற்றையும் சொன்னார். காவல் துறையினரிடம் வாட்ஸப் செய்திகளையும் காட்டியுள்ளார். இரவு 12 மணி வரை நடந்த விசாரணையின் முடிவில் விஜயனிடம் வேறு விஷயங்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்த விசாரணை அதிகாரி நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இதுவரையிலான விஷயங்கள் எல்லாமே சட்டபூர்மானவை; போலீஸ் தரப்பில் அவர்களுடைய சந்தேகத்தைப் பூர்த்திசெய்துகொள்ளவும், துப்புதுலக்கவும் சாட்சிகளை விசாரிக்கும் தேவை உளளது. எல்லாம் சரி. இதற்கு பின்னர்தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது.

வீடு திரும்பிக்கொண்டிருந்த விஜயனை நள்ளிரவில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை மீண்டும் அதே கேள்விகள் கேட்டபடி உள்ளார்கள். அவருடைய செல்போனை பறித்ததுடன், மறுநாள் காலை 11 மணிக்கு வரச் சொல்கிறார்கள். மறுநாள் 11 மணிக்கே சென்றவரை இரவு 7 மணி வரை விசாரணை என்ற பெயரில் வெறுமனே உட்காரவைத்துள்ளார்கள்.

இதனூடாக இந்த விஷயம் வெளியே வருகிறது; அரசியல் கட்சி தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் எதிர்வினை ஆற்றின. விளைவாக, விஜயனை விடுவிக்கிறார்கள்; ஆனால், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிடுகிறார்கள். "ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்" எனும் மோசமான வரியை உள்ளடக்கியிருக்கிறது அந்தச் செய்தி அறிக்கை வந்துள்ளது.

சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும், இதுநாள் வரை கண்ணியமான வகையில் செயல்பட்டுவந்திருக்கும் ஒரு பத்திரிகையாளர் மீது இப்படியான குறுநதகவல், ஆளுமையையும் மதிப்பையும் முற்றிலுமாக குலைக்கும்.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறது என்பதை ஆளும் கட்சி அமைச்சர்கள் திரும்ப திரும்ப பேசிவந்தார்கள். இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது என்று திமுக, அதிமுக இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் வாரத்துக்கு இரு முறை பேசியிருக்கிறார்கள். எல்லா பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. அப்படியிருக்க 'ஆட்சேபகரமான குறுந்தகவல்' என்ற வரையறை மூலம் ஏன் உருவாக்குகிறது தமிழக காவல் துறை?

பத்திரிகையாளர் என்றால், வீரப்பனுடனும் பேச வேண்டும்; தேவாரத்துடனும் பேச வேண்டும்; தாவுத் இப்ராஹிம் தரப்புடனும் தொடர்பில் இருக்க வேண்டும், ஐபி அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களுக்கு கற்பிக்கப்படும் பாலபாடம். ஜனநாயகத்தில், குற்றவாளிகளுடனேயே உரையாடும் சுதந்திரம் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது; ஆனால், இந்த திருநாவுக்கரசு இந்த உரையாடல் நடந்த காலகட்டத்தில் எந்தக் குற்றத்தோடும் சம்பந்தப்பட்டு அறியப்பட்டவரோ, குற்ற வரலாறு கொண்டவரோ கிடையாது; அப்படியிருக்க அவருடன் உரையாடும் ஒருவர் மீது, 'குற்றச் சதியின்போது தொடர்ச்சியான தொடர்பில் இருந்துள்ளார்' என்று அவதூறு கட்டுவது எப்படி சரியாகும்.

எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல; விசாரணைக்கு அழைக்கலாம்; உண்மையாகவே தவறேதேனும் இழைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால், எதுவும் சட்டப்படி நடக்க வேண்டும். சாட்சிக்கு அழைக்கப்பட்டவரை ஒரு குற்றவாளி போன்று சித்திரிக்கக்கூடாது. விஜயன் எனும் தனிநபர் சார்ந்த விவகாரம் மட்டும் அல்ல இது; பத்திரிகை சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, தனிமனித கண்ணியம் - மதிப்பு, அதிகார சமநிலை - பொறுப்புடைமை என்று பல விஷயங்கள் மீதான தாக்குதல்.

காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், அத்துமீறல் தொடர்பில் சம்பந்தப்பட்டோர் மீது தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+