தேர்தல் வழக்கு வாபஸ்.. தவெகவில் இணைந்ததும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை கைவிடும் மதியழகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக கரூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக மதியழகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்தல் வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

MR Vijayabhaskar

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்துள்ளதால், இந்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து மனுதாரர் மதியழகனின் கருத்தைக் கேட்டு தெரிவிப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி என். செந்தில்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற இருப்பதாக மதியழகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி, தவெக வேட்பாளர் மதியழகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+