பல்லாவரம் பெண்ணின் 100 கோடி சாதனை.. தியேட்டர் ஓனர்களை மண்டியிட வைத்த சமந்தாவின் "அந்த" முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமந்தாவின் வாழ்க்கை பயணத்தை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம்... சாதாரண குடும்பத்தில் பிறந்து, பல்லாவரம் பெண்ணாக வாய்ப்புகளை தேடி, தோல்விகள், திருமண வாழ்க்கை, உடல்நலக் குறைபாடு மற்றும் விவாகரத்து என அத்தனையையும் தாண்டி, ஒரு தயாரிப்பாளராக தடம் பதித்த சமந்தாவின் வாழ்க்கை, பல சாதாரண பெண்களுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கையைத் தரும்" என்று பாராட்டி கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

Cheyyaru Balu சேனலில் பேசியிருக்கும் பத்திரிகையாளர் பாலு, "சமந்தா நடித்து தயாரித்த "மாயாண்டி பங்காரம்" பம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பல மேடைகளில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா, இப்போது ஒரு தயாரிப்பாளராக தடம் பதித்து வெற்றி பெற்றிருப்பது ஒரு பெண்ணின் விடாமுயற்சிக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

Samantha

சமந்தாவின் மா இண்ட்டி பங்காரம்

பல வருடங்களாகவே தான் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை, ஒரு கதை மீது கொண்ட நம்பிக்கையில் இந்தத் படத்திற்காகச் சமந்தா முதலீடு செய்துள்ளார். சினிமா பின்னணி இல்லாத ஒரு நடிகை, பல தோல்விகளையும் விமர்சனங்களையும் தாண்டி தயாரிப்பாளராக உயர்ந்து நிற்பது சாதாரணமான விஷயம் அல்ல.

தசை அழற்சி நோய் பாதிப்பால் கடுமையான உடல் ரீதியான வலியையும், மன உளைச்சலையும் சந்தித்த நேரத்திலும் சமந்தா சோர்ந்து போகவில்லை. "வாழ்ந்து காட்டுவோம்" என்ற வைராக்கியத்தோடு அவர் செயல்பட்டார்.

சான்ஸ் மிஸ்ஸான சமந்தா

சினிமா சான்ஸுக்காக காத்திருந்த ஆரம்பக் காலத்தில், சென்னையில் ஸ்டூலில் உட்கார்ந்து வாய்ப்புக்காக அவர் காத்திருந்த நாட்களை நினைவு கூர வேண்டும். மணிரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, 10 நாட்கள் ஷூட்டிங் நடந்த பிறகு, "உன் சருமம் சரி இல்லை" என்று சொல்லி, அவரைப் படத்திலிருந்து நீக்கிய கசப்பான சம்பவம் சமந்தாவின் வாழ்வில் நிகழ்ந்தது.

அப்படிப்பட்ட சூழலில் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் சினிமா மோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போயிருப்பார்கள், ஆனால் சமந்தா அதையும் தாண்டி மீண்டு வந்தார். ஹைதராபாத்தின் பெரும் கோடீஸ்வர குடும்பமான நாகார்ஜுனா குடும்பத்திற்குள், ஒரு நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்ட சமந்தா மருமகளாக சென்றபோது இருந்த அந்தஸ்து குறித்த சவால்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.

ஒத்தை பைசா வேண்டாம்

சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, கோடிக்கணக்கான சொத்துக்களை தாண்டி, தன்மானமே முக்கியம் என்று கருதி விவாகரத்து முடிவை சமந்தாவின் எடுத்தது ஒரு துணிச்சலான செயலாக கருதப்படுகிறது. ஜீவனாம்சம் வாங்குவதற்காகவே விவாகரத்து கோருகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால், "ஒத்தை பைசா கூட எனக்கு வேண்டாம்" என்று சமந்தா அறிவித்தது, அவரது சுயமரியாதையை வெளிப்படுத்தியது.

சமந்தா ஷூட்டிங் ஸ்மாட்டில் மிக எளிமையாக, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். அவருக்கு எதிராகப் பல அவமானங்களும், நம்பிக்கை துரோகங்களும் சினிமாவில் நடந்தன. அவர் சொந்தமாக தயாரித்த படங்கள் குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களை, ஒரு தொழிலாக கருதி அவர் முறியடித்தார்.

அமெரிக்காவில் நெகிழ்ச்சி கண்ணீர்

சுபம் படத்திற்கு அமெரிக்காவில் சமந்தாவிற்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியானது. அப்போது அமெரிக்காவில் ரசிகர்கள் அவருக்கு அளித்த வரவேற்பைக் கண்டு சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இப்போது "'மாயாண்டி பங்காரம்' படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது தொடர்பாகச் சமந்தா ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "தயாரிப்பாளராக நான் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளானேன்.. பல போராட்டங்களுக்குப் பிறகே இதை என்னால் வெளியிட முடிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மனசு கஷ்டப்பட்ட சம்பவம்

ஆனால், இந்த படம் வெளியான பிறகும், பல தியேட்டர்களில் இதை ரிலீஸ் செய்ய உரிமையாளர்கள் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.. அதிலும் ஒரு சின்ன தியேட்டரில் (B&C Center) படத்தை வெளியிட தன்னுடைய தோழியை அனுப்பி பேச சொல்லியிருக்கிறார் சமந்தா.

அதற்கு அந்த தியேட்டர் உரிமையாளர், "ரசிகர்கள் சமந்தாவை கிளாமர் நடிகையாகவே பார்க்கிறார்கள்.. இதுபோன்ற சின்ன சென்டர்களில் அவர் நடிக்கும் ஆக்‌ஷன், நடிப்பு படங்களையெல்லாம் மக்கள் விரும்பிப் பார்க்க மாட்டார்கள்" என்று சொல்லி திரையிட மறுத்துவிட்டார்

எப்படியாவது ரிலீஸ் செய்யுங்கள் சார் என்று சொல்லவும், 'சரி, நான் 2 நாள் திரையிட்டு பார்க்கிறேன். படம் ஓடாவிட்டால், உடனே தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவேன்" என்றாராம்..

தியேட்டர் ஓனரின் இந்த பேச்சை கேட்டு சமந்தா மிகுந்த வருத்தமடைந்தார். ஆனால், அதே தியேட்டரில் கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்துள்ளது.

பல்லாவரம் பொண்ணு சாதனை

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.. தயாரிப்பாளராக சமந்தா மாறிய பிறகு, தனது படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும், ஹீரோவுக்கு இணையான ஊதியத்தை வழங்குவேன் என்று அறிவித்தது தெலுங்கு பட உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

சமந்தாவின் வாழ்க்கை பயணத்தை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம்... சாதாரண குடும்பத்தில் பிறந்து, பல்லாவரம் பெண்ணாக வாய்ப்புகளை தேடி, தோல்விகள், திருமண வாழ்க்கை, உடல்நலக் குறைபாடு மற்றும் விவாகரத்து என அத்தனையையும் தாண்டி, ஒரு தயாரிப்பாளராக தடம் பதித்த சமந்தாவின் வாழ்க்கை, பல சாதாரண பெண்களுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கையைத் தரும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+