Vetri Payanam: ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் எப்போது? அமைச்சர் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பாவிற்கும், மகனுக்கும் உருவ கேலி செய்வது தான் வேலை என முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதியையும் அமைச்சர் மரிய வில்சன் கடுமையாக விமர்சித்தார். மேலும் ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் சலுகை குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வடசென்னை காசிமேடு பழைய ஏலக்கூடம் பகுதியில் மீனவர்களுக்கு மீன் விற்பனை செய்வதற்கு ஏதுவாக குறை அமைக்கும் பணியை தனது சொந்த செலவில் ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மரிய வில்சன் ஏற்படுத்திக் கொடுத்து அதனை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

Marie Wilson

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

தேர்தல் நேரத்தில் இவர்களிடம் வாக்குறுதி அளித்ததாகவும் தற்போது தனது சொந்த செலவில் இதனை செய்து முடித்திருக்கிறேன்." என்றார்.

பாமாயில் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும். துவரம் பருப்பு கொள்முதலில் விலை குறைந்ததற்கு காரணம் திமுக அரசுதான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த தொடர்பான கேள்விக்கு , "140 நாட்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லதை மக்களுக்கு திட்டங்கள் வாயிலாக தங்கள் அரசு செய்து வருகிறது.

நல்லது செய்தால் அதற்கு தாங்கள் தான் காரணம் திமுக என்று கூறிக் கொள்வதும், தவறு செய்தால் அதற்கு காரணம் தவெக அரசுதான் என கூறி வருகிறார்கள்."

பின்னர் சத்தியபாமா குறித்து உருவ கேலி செய்தது தொடர்பாக, பதில் அளித்த அமைச்சர், "அப்பாவுக்கும் மகனுக்கும் பெண்களை கேலி செய்வதுதான் அவர்களுக்கு பிழைப்பே" என காட்டமாக தெரிவித்தார்.

மேலும் ஆந்திராவில் மீனவர்களின் விசைப்படகுகள் பிடிபட்ட நிலையில் மீன்வளத்துறை சார்பாக படங்களை விடுவிக்க கூடிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் பெண்களைப் போல ஆண்களுக்கும் விரைவில் சலுகை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அதனை முதலமைச்சரிடம் கொண்டு சேர்ப்பதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கொடுக்கப்பட்ட போது கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் இருந்த கனிமொழி எம்பியிடம், ஆண்களுக்கும் உரிமைத் தொகை வேண்டும் என இளைஞர்கள் சிலர் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+