ஜெம் வீரமணி வழக்கு! எங்களிடம் ரூ 1 கோடி கேட்டு திமுக வழக்கா? ஆதவ், நிர்மல் குமார் மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் ரூ 1 கோடி கோரி மான நஷ்ட வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அப்படி நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அந்த வழக்கை எண்ணிட வேண்டாம் என பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

gem veeramani

ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளை படிக்கவைப்பதாக நம்ப வைத்து வீட்டிற்கு வரழைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் வீரமணி, அவருக்கு உதவிய உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், பழைய உதவியாளர் கணேசன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

சிறுமிகள் பலாத்காரம் விவகாரத்தில் தனது பெயர் எஃப்ஐஆரில் வரக் கூடாது என்பதற்காக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை விற்று காவல் துறை அதிகாரிகளுக்கும் அரசியல் புள்ளிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்ய ரூ 70 கோடி செலவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் எஸ்ஐடி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் கடந்த திமுக ஆட்சியில் வந்தவை. எனினும் முதல்வராக இருந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெம் வீரமணி, ஸ்டாலினுக்கு நண்பர் என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.

அது போல் தவெக ஐடி விங்கிலும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பப்பட்டது. இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக மீது குற்றம்சாட்டி கருத்துகளை தெரிவித்த அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, தவெக தொழில்நுட்ப பிரிவினர் ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "1 கோடியே 1 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ், தவெக ஐடி விங் பிரிவினருக்கு உத்தரவிட வேண்டும். ஜெம் வீரமணிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புகார் கிடைத்தவுடன் அடுத்த நாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் எந்த தலையீடும் இல்லாமல், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உண்மை இவ்வாறிருக்க திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டி அமைச்சர்கள், தவெக ஐடி விங் வெளியிட்ட பதிவுகள், வீடியோக்களை நீக்க வேண்டும் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் முன் கூட்டியே நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததில்லை என வாதிட்டார்.

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், "அமைச்சர்கள் என்ற முறையில் இல்லாமல் தனிநபர்கள் என்ற முறையிலேயே அமைச்சர்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதினால் எதிர்தரப்பின் வாதங்களை கேட்காமலேயே அமைச்சர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கலாம்" என தெரிவித்தார்.

இரு தரப்பின் ஆரம்ப கட்ட வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர திமுகவுக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்த நிலையில் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அந்த மனுவில் அமைச்சர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அப்படி நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அந்த வழக்கை எண்ணிட வேண்டாம் என பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம் என குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 13 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை எண்ணிடும்படி வலியுறுத்த மாட்டோம் என திமுக உத்தரவாதம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+