ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மெட்ரோ ரயில் பணி.. 3 மாதங்கள் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு சந்திப்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை (குறுக்கு வழித்தடம் CP-6) பணிகளுக்காக வரும் 08.10.2026 முதல் 3 மாதங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு:

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி (Cross Passage CP - 6):

நாளை மறுநாள் 08.10.2026 முதல் 03 மாதங்களுக்கு டிடிகே சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதியில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

அடையார் கேட் ஹோட்டல் மற்றும் அபிராமபுரம் 4வது தெருவிலிருந்து TTK சாலை வழியாக ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Metro rail work on TTK Road Alwarpet Traffic changes for 3 months

மாற்றுப் பாதை: அதற்கு பதிலாக வாகனங்கள் TTK சாலை 1வது குறுக்கு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவிலிருந்து TTK சாலையை நோக்கி வரும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதை: அதற்கு பதிலாக வாகனங்கள் வடக்கு தெரு மற்றும் TTK சாலை 1வது குறுக்கு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கேட்டுக்கொண்டுள்ளது.

Metro rail work on TTK Road Alwarpet Traffic changes for 3 months

சென்னை சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஆபத்தாகவும் வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மீது காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆபத்தான முறையில் வாகனங்களில் சாகசச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த மூன்று நாட்களில் சென்னை முழுவதும் பதிவு எண் பலகைகள் இல்லாமலோ அல்லது சாகசச் செயல்களில் ஈடுபட்ட நிலையிலோ இயக்கப்பட்ட 2,000 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+