உற்பத்தி விலையிலேயே இனி தங்கம்.. சென்னையில் கால் பதிக்கும் பிரபல ரீகல் ஜுவல்லர்ஸ்!
சென்னை: கேரளாவின் முன்னணி ஹோல்சேல் மற்றும் உற்பத்தி நிறுவனமான ரீகல் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டில் தனது முதல் பிரம்மாண்ட கிளையை சென்னை உஸ்மான் ரோடில் வரும் ஜூலை 31, 2026 அன்று திறக்கவுள்ளது.
48 ஆண்டுகால ஹோல்சேல் பாரம்பரியம்
கடந்த 1978ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம், நகை உற்பத்தியிலும், மொத்த வியாபாரத்திலும் சுமார் 48 ஆண்டுகளாக தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இடைத்தரகர்கள் இல்லாத நேரடி உற்பத்தி என்பதால், மிகக் குறைந்த சேதாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வழங்குவதே இவர்களின் பலமாகும். கேரளா மற்றும் கர்நாடகாவின் பெங்களூர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய ரீடைல் மற்றும் ஹோல்சேல் நெட்வொர்க்கைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இப்போது தமிழ்நாட்டுச் சந்தையைக் குறிவைத்து சென்னையில் கால்பதிக்கிறது.
டி.நகர் உஸ்மான் சாலையில் என்ன ஸ்பெஷல்?
பொதுவாகவே, தமிழக மக்கள் திருமண நகைகள் மற்றும் சேமிப்புக்காகத் தங்கம் வாங்கத் தேர்ந்தெடுக்கும் முதன்மை இடம் டி.நகர் தான்.
இங்கு ஏற்கனவே பல முன்னணி பிராண்டுகள் போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது ஃபேக்டரி-டைரக்ட் ஹோல்சேல் விலையையும், பல சலுகைகளையும் ஆயுதமாக கொண்டு டி.நகர் உஸ்மான் சாலையில் களமிறங்குகிறது.
இவர்களின் வருகை சென்னை வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வாங்க மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருமணத்திற்கான மொத்த நகைகள் வாங்குபவர்களுக்கு, இது சாதகமாக அமையும்.
சென்னையில் திறக்கப்படவுள்ள இந்த புதிய ஷோரூமில் பாரம்பரிய மற்றும் நவீன கால டிசைன்கள் எனப் பல்லாயிரக்கணக்கான ஆபரணங்கள் இடம்பெறவுள்ளன.
பாரம்பரிய டிசைன்கள்: கேரளா நகைகள், செட்டிநாடு பாரம்பரிய நகைகள், நாகாஸ் வேலைப்பாடுகள் கொண்ட ஆன்டிக் நகைகள் மற்றும் மும்பை, கொல்கத்தா டிசைன்கள்.
புதுமை டிசைன்கள்: இளைய தலைமுறையினரைக் கவரும் வகையிலான லைட்வெயிட் தங்க நகைகள், அன்சட் மற்றும் பிரீஷியஸ் ஸ்டோன் நகைகள்.
வைர ஆபரணங்கள்: சர்வதேசத் தரம் வாய்ந்த, சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் பிளாட்டினம் கலெக்சன்கள்.
இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் 100% BIS 916 முத்திரையுடனும், மத்திய அரசின் HUID ஹால்மார்க் தரத்துடனும் மட்டுமே வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழைய தங்க நகைகளுக்குச் சிறந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்பு போன்ற வாடிக்கையாளரை கவரும் திட்டங்களும் இந்த சென்னை கிளையிலும் தொடரவுள்ளன.
தென்னிந்திய அளவில் தங்களது தங்க சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் நோக்கில், சென்னை உஸ்மான் சாலை கிளையைத் தொடர்ந்து ரீகல் ஜுவல்லர்ஸ் தனது அடுத்த அதிரடி கிளையைப் புதுச்சேரியிலும் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் பிரதான வணிக வீதியான உஸ்மான் ரோடில், இந்த ஹோல்சேல் நிறுவனம் ஜூலை 31 முதல் தடம் பதிக்கவுள்ளதால், ஆடி மாத மற்றும் பண்டிகைக் கால விற்பனையில் பெரிய அளவில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சென்னை நகை பிரியர்களுக்கும், திருமணத்திற்கு நகை எடுக்கக் காத்திருப்பவர்களுக்கும் ஒரு அசத்தலான சந்தோசமான செய்தியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications