தவெகவின் புதிய தொழிற்சங்கம்.. விஜய்யின் ரகசிய திட்டம்.. பின்னணியில் திமுக, அதிமுக!
சென்னை: தவெக சார்பாக தொடங்கப்பட இருக்கும் தொழிற்சங்கத்திற்கு வெற்றிப் பேரவை தொழிற்சங்கம் என்று பெயர் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தொழிற்சங்கத்திற்கு விஜய்யின் 25 ஆண்டு கால விசுவாசியான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பரணி பாலாஜியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், அக்கட்சி சார்பாக தொழிற்சங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் காரணமாகவே சில வாரங்களுக்கு முன் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கமலக்கண்ணன் தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார். தற்போது தவெக ஆட்சியின் பரபரப்பு ஓரளவிற்கு ஓய்ந்துள்ள சூழலில், தொழிற்சங்க பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளார்.

அரசுத் துறைகளில் இருக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்க கட்டமைப்பு மிகவும் அவசியம். இல்லையென்றால் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கும் என்றும் விஜய் கருதுகிறார். தற்போது தவெகவின் தொழிற்சங்கத்திற்கான தலைவரான தனது ரசிகர் ஒருவரின் பெயரை விஜய் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.
அது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பரணி பாலாஜி தான். தவெகவின் முதல் மாநாடான கள்ளக்குறிச்சி மாநாட்டை முன்னின்று நடத்தியவர் பரணி பாலாஜி. விஜய்யுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர். மக்கள் இயக்கம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே விஜய்யுடன் இருப்பதால், இவர் மீது விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.
அதேபோல் புஸ்ஸி ஆனந்தின் மனதுக்கு நெருக்கமானவர் பரணி பாலாஜி. இதனால் பரணி பாலாஜிக்கான மரியாதையை கொடுக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. தவெகவின் தொழிற்சங்கத்திற்கு வெற்றிப் பேரவை தொழிற்சங்கம் என்று பெயர் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பரணி பாலாஜியும், பொதுச்செயலாளராக கமலக்கண்ணனையும் நியமிக்க ஆலோசனைகள் நடந்துள்ளன.
இதனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பு உற்சாகத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்காக பொறுப்பு அமைச்சர் ஆனந்த் தான். இதனால் தன்னுடைய ஆதரவாளரை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வருவதற்கு ஆனந்தும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் உடனான தொடர்பு காரணமாகவே தவெகவின் சக மாவட்டச் செயலாளர்களை விட பரணி பாலாஜி கூடுதலாக சேட்டை செய்வதாக அக்கட்சியின் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
