Arulvaan Review: அருள் நிதியின் "அருள்வான்” படம் எப்படி இருக்கு? நம்பி பார்க்கலாமா? இல்லையா? ரசிகர்கள் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அருள்நிதியின் படம் என்றாலே ஒவ்வொரு படத்திலும் ஒரு கதை இருக்கும். ஆனால் இந்த முறை மனதை தொடும் சமூக கதையுடன் வந்திருக்கிறார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள அருள்வான் படம் பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த படம் எப்படி இருக்கு? கதை என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காடர் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய கல்வி, பெண் குழந்தைகளின் எதிர்காலம் என இதுவரை அதிகம் பேசப்படாத விஷயத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் எடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி முழுக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நம்மை அங்கேயே கூட்டி சென்று காட்டுகிறது. அவர்கள் பேசும் காடர் மொழி, வாழும் முறை, படும் கஷ்டங்கள் எல்லாமே செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Arulvaan Arulnithi Tamil Movie Review Kollywood G V Prakash

நடிகர் அருள்நிதி நடிப்பு

ஆனால் படத்தின் இரண்டாவது பாதியில் கலெக்டர் முத்துவேல் கேரக்டரில் அருள்நிதி வரும்போது தான் படம் வேற ஒரு இடத்திற்கு செல்கிறது. குறிப்பாக ஒரு பழங்குடியின சிறுமியின் கல்விக்காக போராட்டமும், அதற்கு மாவட்ட ஆட்சியர் கொடுக்கும் ஆதரவும் ரசிகர்களை எமோஷனல் ஆக்கி இருக்கிறது. சிறுமி கிருத்திகாவின் நடிப்பும் சோசியல் மீடியாவில் அதிகமாக பாராட்டப்படுகிறது.

அந்த குழந்தையின் (கிருத்திகா) கண்ணில் தெரியும் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் படத்தின் உயிர் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல ஆரவ், ரம்யா பாண்டியன், ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் ஆகியோரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Arulvaan Arulnithi Tamil Movie Review Kollywood G V Prakash

படத்தின் பிளஸ் பாயிண்ட்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் படம் பிடித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. தியேட்டரில் பார்த்தால் தான் அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கும் என்பதும் பலருடைய கருத்தாகவும் இருக்கிறது. படம் முழுக்க ஆக்ஷன் கமர்சியல், பஞ்ச் டயலாக் என்று எதையும் எதிர்பார்த்து சென்றால் கூட வெளியே வரும் போது படிப்புதான் ஒரு குழந்தையின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் என்ற கருத்து மட்டும் மனதிற்குள் ஆழமாக வேறின்றி விடுவதாக பலரும் கூறியிருக்கின்றனர்.

Arulvaan Arulnithi Tamil Movie Review Kollywood G V Prakash

படத்தின் மைனஸ் பாயிண்ட்

ஒரு சில இடங்களில் ஆவணப்படம் பார்ப்பது போன்ற ஒரு ஃபீல் வருவதாகவும் ஆனால் அதையும் தாண்டி படம் பேசும் கருத்து எமோஷனல் காட்சியும் அதை மறைத்து விடுகிறது என்பதும் பலருடைய விமர்சனமாக இருக்கிறது. திரில்லர், ஹரார் படங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட அருள்நிதி இந்த முறை சமூக அக்கறை கொண்ட படத்தை செலக்ட் செய்து மீண்டும் ஒரு வித்தியாசமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

மொத்தத்தில் அருள்வான் ஒரு மாஸ் படம் இல்லை. ஆனால் தியேட்டரில் இருந்து வெளியே வந்த பிறகு மனசுக்குள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும் படம் என்பதுதான் பலருடைய கருத்து. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்கலாம் என்பதும் பலருடைய ரெக்கமண்டாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+