கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை..தமிழக மீனவர்கள் கைதை உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்திய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''இலங்கையுடன் இந்தியா நல்லுறவை பேணுகிறது. இதனால் கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலே இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்'' என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி உச்சநீதிமன்றத்தில் கூறினார். இதை கேட்ட உச்சநீதிமன்றம் ''கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறி வழக்கு விசாரணையை 2027 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது.

katchatheevu-row-tamil-fishermen-arrest-when-crossing-the-sea-border-government-doesnot-want-to-get

இந்தியா - இலங்கை இடையேயான கடல்சார் ஒப்பந்தம் 1974 மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதை எதிர்த்தும, 1976ம் ஆண்டில் மீனவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீண்டும் மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அ்மர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆஜராகி வாதம் வைத்தார்.

அப்போது அவரிடம் நீதிபதி சஞ்சய் குமார், ''இந்த ஒப்பந்தங்கள் பற்றி இலங்கையிடம் பேசப்படுகிறதா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, ''அரசு இதில் தலையிட விரும்பவில்லை.

தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் அரசு ஈடுபட்டது. அதன்பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி இலங்கையுடன் இந்தியா நல்ல உறவை கொண்டுள்ளது. இதனால் அந்த உறவை சிதைக்க விரும்பவில்லை'' என்றார்.

அதுமட்டுமின்றி அவர் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாலே இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர் என கூறினார். இதுதொடர்பாக அவர், ''இந்திய கடல் பகுதி அதிகமாக மாசுப்பட்டுள்ளது. இதனால் இந்திய கடல் பகுதியில் மீன்கள் கிடைப்பது இல்லை. இதனால் மீனவர்கள் இந்திய எல்லையை கடந்து செல்கிறார்கள்.

எல்லையை கடந்து மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் அங்கு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இலங்கை எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களிடம் கூறினாலும் அவர்கள் தொடர்ந்து அங்கு செல்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், தமிழ்நாட்டில் மீன் வளம் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதால் அவர்கள் அங்கு செல்ல விரும்புகிறார்கள். நாம்தான் நமது கடல்களை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம்; அவர்கள் இங்கு வருவதில்லை'' என்றார்.

இதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி மீனவர்களால் ஆறு மாசுபடுவது இல்லை என்றும் கூறினார்.

அதேபோல் மீனவர்கள் தரப்பில் ஆஜரான திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி வில்சன், ''இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை திருத்தம் செய்யப்படவல்லை'' என்று கூறினார். அதுமட்டுமின்றி மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.

அதேபோல் தமிழக அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா கூறுகையில், ''இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் சேர்ந்து தீர்வு காண வேண்டும்'' என்று கூறியதோடு, சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் விஜய் கேட்டு கொண்ட கடிதம் பற்றியும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ''இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு காலத்திற்கு நிலுவையில் வைத்திருக்க முடியும்'' என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, '' இலங்கை மக்கள் அவர்களின் கடல்நீரை மாசுப்படுத்துவது இல்லை. நானே இலங்கைக்குச் சென்றிருக்கிறேன். அங்கு சாலைகளில் குப்பை கொட்டுவத இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் அவர்கள் தங்கள் கடல்களிலும் எதையும் கொட்டுவதில்லை.

சாலைகளையே அசுத்தம் செய்யாதவர்கள் கடல்களிலும் அசுத்தம் செய்யமாட்டார்கள். இதனால் தான் மீன்கள் இலங்கை கடல்பகுதியில் அதிகமாக இருக்கலாம். கைது நடவடிக்கையில் ஏதாவது செய்ய வேண்டும் . இதனால் தமிழக மீனவர்களை கடல் எல்லையைத் தாண்ட வேண்டாம் என்று மத்திய - மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார். இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் 2027 பிப்ரவரி மாதத்துக்கு வழக்கை தள்ளிவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+