கரூர், கோவையில் திடீர் மாற்றம்! சைலண்ட்டாக அமலுக்கு வந்த மும்மொழிக்கொள்கை? TRB ராஜா கேள்வி!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து கவர்களில், இந்தியில் எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதற்கு முன்னர் இப்படி இருந்தது கிடையாது என்றும்.. தவெக ஆட்சியில்தான் இந்தி சைலண்டாக நுழைந்திருக்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கூட, இந்தியை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், இந்தி திணிப்பு என்பது நார்மலைஸ் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர். இப்படி இருக்கையில்தான் கோயம்புத்தூர் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளில் இந்தி எழுத்து அச்சிடப்பட்ட மாத்திரை கவர்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.

Hindi

அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கொடுக்கும் பேப்பர் கவர்களில், மாத்திரையை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? காலையா? மதியமா? மாலையா? என அச்சிடப்பட்டிருக்கும். இதுநாள் வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்தான் அச்சிட்டு இந்த கவர் விநியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதல் முறையாக தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்தும் அச்சிடப்பட்ட கவரில் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல! முதலில் கரூர்.. இப்போது கோவையிலும் அதே நிலமை.." என பதிவிட்டு இந்தி எழுத்துகளுடன் விநியோகிக்கப்பட்ட மருந்த கொடுக்கும் பேப்பர் கவர்களின் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார்.

இது ஏதோ இன்று புதியதாக நடக்கும் விஷயம் கிடையாது. கடந்த வாரம்தான் தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது. இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. பின்னர், இந்திய எழுத்துக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது. இப்படி நடந்து கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் இந்தி மொழி சர்ச்சை தற்போது வெடித்திருக்கிறது.

சரி தவெக ஆட்சியில்தான் இப்படி இந்தி எழுத்துக்கள் ஆங்காங்ககே தெரிகிறதா? திமுக ஆட்சியில் தெரியவில்லையா? என்று கேட்டால்.. அப்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்தன. ஆனால், திமுக அதற்கு எதிராக ஷார்ப்பாக கண்டனத்தை தெரிவித்திருந்தது. அதாவது 2026 ஜனவரியில் சென்னை பூங்கா ரயில் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மே 17 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்பு மை கொண்ட இந்தி எழுத்துக்களை அழித்தன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. இன்று வரை சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர் பலகை நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது என்பதுதான்.

தவெக அரசு இந்த விஷயத்தில் விட்டுக்கொடுக்காமல் நடந்துக்கொள்ள வேண்டும். கோவை, கரூர் மருத்துவமனைகளில் இந்தி எழுத்தில் மருந்து காகிதங்கள் விநியோகிக்க யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+