6,574 காலியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் அறிவிப்பு.. விண்ணப்பிக்க நவம்பர் 5 கடைசி நாள்
சென்னை: தமிழக போட்டித்தேர்வர்கள் அதிகம் எதிர் பார்த்து கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6,514 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பம் செய்வது எப்படி? கடைசி நாள் என்ன? தேர்வு எப்போது நடைபெற உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய நவம்பர் 5ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு விண்ணப்பம் செய்ய முடியாது.
அதன்பிறகு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய நவம்பர் 9 ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு 11.59 வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது. பிறகு 2027 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.tnpscexams.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இன்று வெளியாகி உள்ள இந்த அறிவிப்பில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நர்முக உதவியாளர், விஏஓ, வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
