நாகர்கோவில் சபரிவர்மன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்.. பிரேதப் பரிசோதனை வீடியோ பார்த்தபிறகு முடிவு!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட உடற்கூராய்வு குறித்த வீடியோவை பெற்று குடும்பத்தினர் தரப்பில் ஆய்வு செய்ததில் சந்தேகமும் இல்லை என்பதால் உடலை வாங்க ஒப்புதல் கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஔகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றதாக கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இறந்துபோனதாக கடந்த 13 ஆம் தேதி அதிகாலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.

Nagercoil Prison Death

பிரேதப் பரிசோதனையில் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறை வார்டன்கள் 3 பேர், கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிவர்மனின் உறவினர்கள் சபரிவர்மனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தனது மகனிடம் அடிக்கடி லஞ்சம் வாங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தமிழக முதல்வர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட போலீசாரை அரசு காப்பாற்ற முயற்சிப்பதாவதும் குற்றம் சாட்டி 5வது நாளாக சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார் ஆகியோர் சிறையில் மரணமடைந்த சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர். சபரிவர்மனின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர்கள், அவருக்கு ரூ.10 லட்சம் நிதி, தற்காலிக அரசு பணி உள்ளிட்ட அரசு நிவாரணங்களை வழங்கி போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அரசு நிவாரணங்களை சபரிவர்மனின் மனைவி ஏற்க மறுத்தார். தனது கணவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனக் கூறினார்.

இந்நிலையில், சபரிவர்மன் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட உடற்கூராய்வு குறித்த வீடியோவை பெற்று குடும்பத்தினர் தரப்பில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருந்ததையும் வீடியோவையும் ஆய்வு செய்ததில் சந்தேகமும் இல்லை என்பதால் உடலை வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சபரிவர்மன் உடலை தகனம் செய்யாமல், அடக்கம் செய்யவும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+