விஜய் மாதிரி 15 வருஷம் மக்களை ஏமாத்தணும்! மலையாள நடிகர் தியான் பேச்சு.. பின்னணி இதுதானா? கோபத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள நடிகர் தியான் சீனிவாசன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது தான் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. முதலில் திரிஷாவை மறைமுகமாக கிண்டல் செய்தாரா? என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது விஜய் மாதிரி 15 ஆண்டுகள் சாரிட்டி செய்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோக்கள் பரவி ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியாக உள்ள விசிட்டர்ஸ் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜயை நடிகர் தியான் சீனிவாசன் கலாய்த்துருகிறார். தியான் சீனிவாசன் பெரிதாக படத்தில் நடித்து பிரபலமாகவில்லை என்றாலும் இதுபோல நிகழ்ச்சிகளில் சர்ச்சையாக பேசி பலருக்கும் தெரிந்தவராக மாறியிருக்கிறார்.

மலையாள நடிகர் தியான் பேச்சு

தற்போது அவர் மேடையில் பேசும்போது, தமிழ்நாட்டில் விஜய் முதல்வரான பிறகு இன்னும் 15 வருடத்தில் உன்னை கேரள முதல்வர் ஆக்குகிறேன் என்று என் நண்பன் அஜி வர்கீஸ் சொன்னார் என்று கூறி பேச்சை தொடங்கினார். அதற்கு பிறகு மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் தலைவராக வேண்டும் அதற்கு பிறகு 15 வருடங்கள் சாரிட்டி செய்து மக்களை ஏமாற்ற வேண்டும்.. விஜய் செய்தது போல.. அப்புறம்தான் முதல்வராக முடியும் என்று என்னுடைய நண்பர் சொன்னாரு. அப்படித்தானே அஜீ என்று கேட்க, அதற்கு தலையை அஜீயும் சிரித்துக் கொண்டிருந்தார்.

Dhyan Sreenivasan Vijay Trisha Navya Nair

சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர்

அதற்கு பிறகு தான் தியான் பேசும்போது நான் முதல்வராக பதவியேற்கும் நாளில் நடிகை நவ்யா நாயர் பட்டுப்புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து என்னை பார்த்து கண் கலங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பிறகு பேசிய அஜி, என் நண்பன் தியான் ஒரு பைத்தியம்... மன்னித்துவிடுங்கள் முதல்வர் விஜய் சார்" என்று நிலைமையை சமாளித்து இருந்தார்.

அதுபோல நவ்யா நாயர் பேசும்போது, நான் நீ சொன்ன விஷயம் மட்டும் நடந்து விட்டால் பச்சை வண்ணத்தில் பட்டுப்புடவை கட்டி முன் வரிசையில் அமர்ந்து கண்கலங்குகிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த விஷயம் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் விஜய் பதவி ஏற்பு விழாவில் திரிஷா பட்டு புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்கிய காட்சியை மறைமுகமாக கிண்டல் செய்வதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தியான் சீனிவாசன் யார்

அதுபோல தியான் சீனிவாசன் யார் என்றால், மலையாளத்தில் மூத்த நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான சீனிவாசனின் மகன் தான். 'திர', 'லவ் ஆக்ஷன் டிராமா', 'உடல்', 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய படத்தை விட அவருடைய பேட்டி தான் அடிக்கடி வைரலாகி இருக்கிறது. இதுபோல பல நேரங்களில் சமூக அரசியல் விஷயங்களை காமெடியாக பேசும் பழக்கம் அவருக்கு இருப்பதாக மலையாள ரசிகர்களும் கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த முறை அவர் பேச்சு தமிழ்நாட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலர் இது வெறும் ஜாலியான மேடைப்பேச்சு தான் அதை பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் விஜய் திரிஷா பெயரை சொல்லலானாலும் யாரை சொல்றாருன்னு எல்லாருக்கும் புரியுது, 15 வருடம் மக்களை ஏமாற்றனும் என்று சொன்னது தேவையில்லாத பேச்சு மற்றொரு மாநில முதல்வரை இப்படி கிண்டல் செய்வது சரியில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+