இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! உச்சகட்ட டென்ஷனில் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' என்கிற அமைப்பை அவரது ரசிகர்கள் இன்று உருவாக்கியிருந்தனர். இந்நிலையில் இது குறித்து அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

திரிஷா ரசிகர்கள் திருநெல்வேலியில், 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவையை' தொடங்கியிருந்தனர். ஏற்கெனவே அரசியல் வட்டாரங்களில் திரிஷாவின் பெயர் அடிப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் பெயரில் பேரவை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு குறித்து பாஜக முன்னாள் தலைவரும், 'வி த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Trisha

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "திருநெல்வேலியில் இளைய புரட்சித்தலைவி என்கிற பெயரில் மன்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் வெட்கக்கேடு. இங்கு எவ்வளவோ படித்த மக்கள் இருக்கிறார்கள்.. ஆக்கபூர்வமாக செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன! ஆனால், இன்னமும் யார் போட்டோவை பாக்கெட்டில் வைத்து சுற்றிக் கொண்டிருப்பது என்கிற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் திமுக கொண்டு வந்த கலாச்சாரம்தான்.

இரண்டு படங்கள் நடித்தால் தலைவர் என்று கொண்டாடப்பட்டனர். எத்தனையோ படித்த நபர்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். மருத்துவர்கள் தமிழ்நாட்டையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் வந்து.. இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்களா? இப்படி இருக்கையில் இந்த மாதிரியான கலாச்சாரத்தை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து திமுக தலைவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

கடந்த 30-40 ஆண்டுகளாக எதற்கெடுத்தாலும் சினிமா வசனம்! இப்போது ரிலீஸ், சோசியல் மீடியா பாப்புலாரிட்டி இதுதான் தமிழ்நாடா? வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங்கள் மூலம் செய்யப்படும் வசூல் தான் தமிழ்நாட்டில் வெற்றியா? இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கிறதா? காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு.. தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளாக கீழ்நோக்கி தான் போய்க்கொண்டிருக்கிறது.

முதலீடு உருவாக்கத்தில் 11வது இடத்திலும், வேலைவாய்ப்பு உற்பத்தியில் 7வது இடத்திலும், கடன் வாங்குவதில் முதலாவது இடத்திலும் நிற்கிறோம். இதெல்லாம் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருக்கிறதா? கல்யாண மண்டபங்களில் மைக் கிடைக்கிறது என்று ஆயிரம் பேருக்கு நடுவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கீழே வந்து பார்த்தால் தான் மக்கள் பிரச்சனை என்னவென்று தெரியும். இதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினும், எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சிந்திக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+