களமிறங்கும் 7 பேர்.. காவிரி விவசாயிகளின் கருத்தை கேட்க திமுக சார்பில் குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவசாயிகள் கருத்துக் கேட்புக் குழுவை அமைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு 25 ஆம் தேதி முதல் ஒரு வார காலம் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிய உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "த.வெ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உணவளிக்கும் உழவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரும் திறக்கவில்லை; வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை. கண்ணீர் விடும் விவசாயிகளின் அழுகுரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை.

MK Stalin

'மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது' என்ற கர்நாடக முதலமைச்சரின் சவாலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். காவிரி நீர் உரிமையிலும் உச்சநீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேரடிக் கொள்முதலை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து பறித்துக் கூட்டுறவு அமைப்புகளுக்கு மாற்றத் த.வெ.க அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது உற்பத்தியைக் குறைப்பதோடு, உழவர்களையும் கடுமையாக பாதிக்கும். இதுபற்றி எல்லாம் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் த.வெ.க அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே, இந்தப் பிரச்சனைகள் குறித்து டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளைக் கேட்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு ஒருவார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களைத் திரட்டி கழகத் தலைமைக்கு அளிக்கும். அதில் இருந்து பெறப்படும் உரிய கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படும். அதன்பிறகாவது டெல்டாவைக் காப்பாற்றத் தமிழ்நாடு அரசு முன்வரும் என எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது. வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, "காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு". விவசாயத் தோழர்களே... நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+