ஆட்சியர் பத்மஜா புகார் அளிக்கலைனு சொல்றீங்களே! எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா இல்லையா? தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா, புகார் அளிக்கவில்லை என்று மட்டும் தான் சொல்கிறீர்களே தவிர, அந்த எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா இல்லையா என்பது குறித்து விளக்கம் இல்லையே என தமிழக காவல் துறையிடம் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆபாச மெசேஜ் அனுப்பியது குறித்து ஆட்சியர் எந்த புகாரையும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பவில்லை என காவல் துறை பதில் அளித்திருந்தது.

Tamilisai Soundararajan

அந்த பதிலை சுட்டிக் காட்டிய தமிழிசை, ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று மட்டுமே சொல்கிறீர்களே எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா இல்லையா? என்பதை சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது... இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்?

செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது கண்டனத்திற்குரியதாகிக் கொண்டிருக்கிறது.. இன்னும் சொல்லப் போனால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்... தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும்பொழுது.. தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது?.. அது மட்டுமல்ல ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று தான் சொல்கிறார்களே தவிர சட்டமன்ற உறுப்பினர் அனுப்பினாரா இல்லையா என்பதில் விளக்கம் இல்லை? இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மதுபோதையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று தொல்லை கொடுத்ததாகவும் சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

இதை முதன்முதலில் வெளியே கொண்டு வந்தவர் திமுக எம்பி கனிமொழிதான். அவரது கண்டனத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் மகளிர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகார் உண்மையானது இல்லை என எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். அவர் "ஆட்சியருக்கு தொகுதி சம்பந்தமான மனுக்களை மட்டுமே அனுப்பியதாக" தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது கணவரும் விழுப்புரம் ஆட்சியருமான அப்துல் ரகுமான் தலைமைச் செயலாளருக்கு புகார் கடிதம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் முதல்வர் விஜய் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+