நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும்.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்! அடித்து சொல்லும் தமிழிசை!
திருச்சி: எஸ்ஐஆர் இல்லையென்றால் இன்று விஜய் முதலமைச்சராக இல்லை. நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும் எனவும், காவிரி நதிநீர் தராத கர்நாடகாத்தை முதல்வரை எதிர்த்து புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்து இருக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என காத்திருக்கிறோம். அதற்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் பேசுவது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள். பெண் அதிகாரிகள் மறைமுகமாக குறுஞ்செய்தி மூலம் தாக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் எம்.எல்.ஏவை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். ஒரு புறம் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மெளமாக இருக்கிறார்.

டாஸ்மாக்
மருத்துவ கழகம் டாஸ்மாக் பணிகளை குறிப்பாக பாட்டில்களை நிர்வகிக்க மேற்கொள்ள உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் மனம் குளிரும்படி ஆட்சி செய்யுங்கள் டாஸ்மார்க் குளிரும்படி ஆட்சி செய்யாதீர்கள். தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் அதிக கவனம் செலுத்துகிறது. டெல்டா மாவட்டம் பாலைவனமாக ஆகிக்கொண்டிருக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை 3000 கன அடி நீர் கொடுக்க வேண்டுமானால் இதுவரை கொடுக்கவில்லை.
முதல்வர் விஜய்
தமிழகத்தின் பெருமையை அடகு வைப்பதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா? புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியின் அம்மாவே வெட்கி தலை குனிகிறார். சோனியா புத்தக வெளியிட்டு விழாவில்முதலமைச்சர்களுக்கு மேடையில் இடம் கூட ஒதுக்கப்படவில்லை. ராகுல் காந்தி அரசியலுக்கே தகுதி இல்லை என்பது போல் தான் அவரின் பேச்சு இருந்தது. தேசிய சிந்தனையோடு நதி விவகாரத்தை அணுக வேண்டும். காவிரி நீர் கர்நாடகத்திற்கே என்ன உரிமை இருக்கிறதோ? அதே உரிமை தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது.
காவிரி விவகாரம்
காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் நிலைப்பாடுதான் பிரதமரின் நிலைப்பாடு. பிரதமர் எந்த விதத்திலும் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்க மாட்டார். காவிரி நதிநீர் தராத கர்நாடகாத்தை முதல்வரை எதிர்த்து புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்து இருக்க வேண்டும். ஆயிரம் விளக்கம் கூறலாம்.. ஆனால் அவர்கள் அரோகரா செய்தது தவறு. முதல்வரை ஒப்பிடுவதற்கு முருகன் வேண்டும். ஆனால் திருப்பரங்குன்ற கோவிலில் விளக்கு ஏற்ற விட மாட்டார்கள்.
எஸ்ஐஆர்
எஸ்ஐஆர் இல்லையென்றால் இன்று விஜய் முதலமைச்சராக இல்லை. நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும்.
. தமிழக வெற்றி கழகத்தை எப்படி எதிர்க்கிறோமோ அதே போல தான் திமுகவையும் எதிர்க்கிறோம்.
சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. கைகள் உயர்கிறதோ இல்லையோ.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
விசில் அடிக்கிறதோ இல்லையோ என சொல்ல மாட்டேன். ஆனால் அது போட்டியிலேயே இல்லை" என்றார்.



Click it and Unblock the Notifications
