கழட்டி விட்டுட்டு கல்யாணத்துக்கு போறியா? இனி ருத்ர தாண்டவம் பார்ப்ப.. திரிஷா பேரவை! ப்ளூ சட்டை கலாய்
சென்னை: திரிஷா பெயரில் ஒரு பேரவை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும், "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் இன்று திருநெல்வேலியில் இந்த பேரவையின் லோகோவை வெளியிட்டு தொடங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் செய்தியாக வெளியாகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
அந்தப் பதிவில், "என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற.. இனி ருத்ர தாண்டவத்தை நீ பாப்ப.. நற்பணி மன்றம் நடிகை திரிஷாவுக்கு இன்று திறக்கப்பட்டுள்ளது" என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் எதை மனதில் வைத்து இப்படி பதிவிட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டு கமெண்ட் பகுதியில் கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கோரிக்கை
சமீபகாலமாகவே விஜய் எந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவருடன் திரிஷாவும் இருப்பது பற்றிய பேச்சு இணையத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு சில பொது நிகழ்ச்சிகளிலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதை வைத்து ஏற்கனவே ஏகப்பட்ட விவாதங்கள் ஓடி வருகின்றன. விஜய் ரசிகர்கள் எல்லோருமே, "திரிஷா மேடம் நீங்க விஜய் அண்ணா கூட நிகழ்ச்சிக்கு வந்துடாதீங்க" என்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கமெண்ட்களில் கதறி வருகிறார்கள்.
தனியாக வந்த முதல்வர் விஜய்
விஜய் மற்றும் திரிஷா இருவரும் நீண்ட காலமாகவே திரைப்படங்களில் நடித்து நட்பாக இருக்கும் சமயத்தில் இப்போ சமீப காலமாகவே பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே கலந்து கொண்டு வருகின்றனர். அதை வைத்து பல விவாதங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் அனிருத், காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் தனியாக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் திரிஷா கலந்து கொள்ளவில்லை.
ப்ளூ சட்டை மாறன் கலாய்
இந்த முறை விஜய் தனியாக வந்தது, திரிஷா வராதுவும் சோசியல் மீடியாவில் விவாதம் ஆகிவிட்டது. அனிருத் வரவேற்புக்கு விஜய் தனியாகவும் அவருடைய மனைவி சங்கீதா தனியாகவும் கலந்து கொண்டனர். சங்கீதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தான் திரிஷா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போது திடீரென திருநெல்வேலியில், திரிஷா பெயரில் இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விஷயத்தையும் இணைத்து தனது வழக்கமான நக்கல் பாணியில் ப்ளூசட்டை மாறன் கலாய்த்து பதிவிட்டு இருக்கிறார்.
அதிலும் அவர் பயன்படுத்திய "என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற?" என்ற வரி தான் இப்போ மீம்ஸ் போடுபவர்களுக்கு வசதியாகிவிட்டது. விஜய் தனியாக திருமண நிகழ்ச்சிக்கு வந்ததையும், திரிஷா பெயரில் பேரவை தொடங்கி இருப்பதையும் இணைப்பு இப்படி எல்லாம் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார். எதற்காகவே இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எது எப்படியோ திரிஷா பெயரில் பேரவை தொடங்கப்பட்ட செய்தி ஒரு பக்கம், விஜய் அனிருத் வரவேற்புக்கு தனியாக வந்தது மறுபக்கம் என இந்த இரண்டையும் சேர்த்து ப்ளூ சட்டை மாறன் போட்ட கிண்டல் பதிவு இப்ப இணையத்தில் தனியாக ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.




Click it and Unblock the Notifications
