தவெக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத விசிக ஜோதிமணி! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று முதல்வர் விஜய்யின் முகாம் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காட்டுமன்னார் தொகுதி விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு தவெக அழைப்பு விடுத்து இருந்தது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டது.

VCK Jothimani skips meeting of MLAs from TVK-allied parties here is the reason

இந்த கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இன்று பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி பங்கேற்கவில்லை. காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிக சார்பாக போட்டியிட்ட ஜோதிமணி உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ காமராஜ்ஜும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். தவெக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து இருந்தது. எனினும், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தொகுதி சர்ந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்ததாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்ததாகவும் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் கூறினர். சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சிகளை நம்பி அந்த கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் முடிந்துவிட்டதால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்ற தவெக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+