மேஷம் முதல் கன்னி வரை.. பணவரவு, பதவி உயர்வு, சொத்து யோகம்.. இந்த வாரம் யாருக்கு ஜாக்பாட்?
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலைகளை பொறுமையாக செய்வது நல்லது. உறவுகளை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், பயணம் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பண விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும்.
குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையேயான சண்டை, காதல் அமைப்பில் சண்டைகள் இருந்தாலும் நீங்கள் இணக்கமாக, சமாதானமாக செல்வது நன்மைகளைத் தரும். குடும்ப விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சிறிய கோபம் கூட தேவையில்லாத பதட்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் பேரில் வீடு, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தங்க நகைகள் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். குடும்பத்திற்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கும். அனுமன் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய அற்புதமான காலகட்டம். வேலைகளில் அற்புதமான மாற்றம் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக ஏதாவது வேலை தொடங்கக்கூடிய யோகம். கடன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். வேலையை எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
எல்லா விஷயங்களையும் கஷ்டப்படாமல் செய்வீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. எலும்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பின்புறப் பகுதி வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சனி வக்கிர கதி இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. 24, 25, 26 ஆம் தேதிகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும். குழப்பமான மன நிலை இருந்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.
கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான வாரம். 7 ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வாக்குவாதங்கள் வழக்கு, போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பண வரவுக்கான உத்தரவாதங்கள் ஏற்படும். பெருமாள், விஷ்ணு, கபாலீஸ்வர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். ராகவேந்திரர் வழிபாடு செய்வது பலவிதத்தில் ஏற்றம் ஏற்படும். குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஏதாவதொரு வகையில் குரு வழிபாடு செய்வது ஜெயத்தை ஏற்படுத்தும்.
அரசுத் துறை, அரசியல்வாதிகள், தொழில் துறையில் மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்கள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பெரும் வெற்றிகளைப் பெறக்கூடிய காலகட்டம். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். பஞ்சம ஸ்தானம் அற்புதமாக இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும். 3 ஆம் இடம் பாதிக்கப்பட்டுள்ளதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. கழுத்து பிடிப்பது, சுழுக்கு, தொண்டை பாதிப்புகள், தோள்பட்டை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள், நரசிங்கப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு பல், எகிறு, வேர் சிகிச்சை, மூக்கில் பிரச்சனை, முகத்தில் வெட்டுக்காயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணைக்கு சிறிய அறுவை சிகிச்சைகள், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீடு அலங்காரம், வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பசு மாடு வாங்குவது, தோட்டங்கள் வாங்குவது போன்ற யோகம் ஏற்படும். அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் முதுகுவலி, கேல்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். வயிறு, நரம்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. உறவுகளால் அனுகூலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகளுடன் இருந்து வந்த பாதிப்புகளை போக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். அஷ்டமத்தில் இருக்கும் சனிக்கு ராகுவின் வீரியம் இருப்பதால் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் தேவையில்லாத குழப்பங்கள், அவப்பெயர் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
ரத்தத்தில் பரவும் நோய் பாதிப்புகளில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றத்தில் அதீத கவனத்துடன் செயல்படுவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பில் கவனமில்லாமல் இருந்தால் உடனிர்ப்பவர்களாலேயே பிரச்சனைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மகம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. அலர்ஜி, தலைவலி, இடதுபுற பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்குப் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்கிற எண்ணம் தோன்றும். யாரிடமும் சரியாகப் பேசக்கூட மனது வராத மனநிலைமை இருக்கும். மனம் இறுக்கமாக இருக்கும்.
வீட்டின் இடதுபுறம் இருக்கும் ராமர், சீதா, லட்சுமணன், அனுமனை மனதார வழிபாடு செய்வது சகலவித நன்மையைத் தரும். துர்க்கை வழிபாடு, ஹயக்ரீவர் வழிபாடு மேன்மையைத் தரும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்மைகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
7 ஆம் இடத்தில் இருக்கும் சனி தனித்து விடப்பட்ட சனி என்பதால் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் இணக்கமாகவும், பொறுமையாகவும் செல்வது நன்மை பயக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பெரும் செல்வாக்கு, சந்தோஷமும் ஏற்படக்கூடிய காலகட்டம்.
ராசி லக்னத்தில் குடும்ப ஸ்தானத்துக்கு சுக்கிரன் போகிறார். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. கடைசி ஒரு மாதமாக ஆரோக்கியத்தில் தொண்டை எரிச்சல், வயிறு உபாதைகள் போன்றவற்றை அனுபவித்து வந்திருப்பவர்களுக்கு அந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்ப ஸ்தானத்திற்கு சுக்கிரன், புதன் சேர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். பின்புறப் பகுதி வலி, கால் பாதம் தொடர்பான பாதிப்புகள், ரத்த அழுத்தம் போன்ற விஷயத்தில் கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
