சூர்யாவின் "சீன்” படம் 3 வாரத்தில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? பட்ஜெட்டை தாண்டி பல மடங்கு லாபம்!
சென்னை: சூர்யா நடித்த சீன் படத்துக்கு இந்த தீபாவளி ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்திருந்தது. ஒரே வருடத்தில் தொடர்ந்து படங்கள் கொடுத்து வந்த சூர்யா இந்த படத்தில் மூலமாகவும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறார். படம் வெளியாகி 3 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது உலக அளவில் 262 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருஷத்தில் ஏற்கனவே சூர்யவுக்கு கருப்பு மற்றும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் சூப்பர் டூப்பர் வெற்றி கொடுத்து விட்டது. அதனால் சீன் படத்துக்கும் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படமும் சூர்யாவுக்கு வெற்றி கொடுக்குமா? அல்லது பிளாப் ஆகிவிடுமா? என்று பலரும் காத்திருந்தனர். காரணம் இதற்கு முன்பு கடந்த சில வருடங்களாகவே சூர்யா நடித்த எந்த படமும் பெரிதாக அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. அதனால் ராசி இல்லாத நடிகர் என்ற ஒரு முத்திரையும் குத்தப்பட்டு விட்டார். அப்படி இருக்கும்போது அவருக்கு திடீரென அடுத்தடுத்து வெற்றி கிடைப்பதே சினிமாவில் அதிசயமாக பார்க்கப்பட்டது.

மூன்றாவது வர வசூல் நிலவரம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு சீன் படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லின், உள்ளிட்ட பலர் நடித்தனர். மலையாளத்தில் ரோமஞ்சம், ஆவேசம் போன்ற படங்களை கொடுத்த ஜித்து மாதவன் தமிழில் இந்த படத்தை இயக்கியிருந்தார். முதல்முறையாக அவர் தமிழில் படத்தை இயக்குவதால் அதுவும் ரொம்பவும் எதிர்பார்க்க ஒரு காரணமாக இருந்தது. படம் வெளியான முதல் வாரத்தில் நல்ல வேகத்தில் சென்றது. அதற்குப் பிறகு 2வது வாரத்தில் வசூல் குறைய தொடங்கியது. ஆனாலும் இப்போது 3வது வாரத்திலும் படம் தியேட்டரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
நன்றி தெரிவித்த சூர்யா
இதற்காகவே சில நாட்களுக்கு முன்பு சந்தோஷத்தோடு சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் உலக அளவில் 262.42 கோடி வசூலை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 150.64 கோடி நெட் வசூல் செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் 89.25 கோடி வசூல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தின் பட்ஜெட்
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 3வது வாரத்திலும் ஞாயிற்றுக்கிழமை வசூல் சனிக்கிழமை விட அதிகரித்திருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு வந்த ஓம் படத்தின் வசூல் கூட 2வது நாளே குறைய தொடங்கிவிட்டது. ஆனால் சீன் படத்தில் வசூல் டீசன்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதனாலயே தியேட்டரிலிருந்து இன்னும் படத்தை தூக்கவில்லை. படத்தின் பட்ஜட்டை பொறுத்தவரை 60 கோடி என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல மடங்கு லாபம்
இதில் சூர்யாவின் சம்பளம், தயாரிப்பு செலவு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், விளம்பர செலவு என அனைத்தையும் சேர்த்த கணக்காக கூறப்படுகிறது. இருந்தாலும் 60 கோடி பட்ஜெட்டில் எடுத்துக் கொண்ட படம் உலக அளவில் 262 கோடி வசூல் செய்திருப்பது மிகப்பெரிய வித்தியாசம் தான். இந்த வருடம் சூர்யாவிற்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்து வருவதால் ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இப்போது 250 கோடி கிளப்பை தாண்டி இருப்பது அந்த கொண்டாட்டத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
