ஜோதிகாவை திரையில் பார்த்ததும் நடந்த சம்பவம்.. சீன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? நெகிழ்ந்த சூர்யா
சென்னை: ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அதன் வசூலை வைத்து மட்டும் முடிவு செய்து முடியாது. ரசிகர்கள் திரையரங்குகளில் எந்த காட்சியை கொண்டாடுகிறார்கள், எந்த இடத்தில் கைதட்டுகிறார்கள் என்பதிலும் அந்த படத்தின் வெற்றி தெரிந்து விடும். அப்படித்தான் சூர்யா நடித்துள்ள சீன் படத்தில் ஜோதிகா வரும் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சூர்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்று வருகிறது.
சீன் படத்தில் ஜோதிகா கெஸ்ட் ரோலில் வருவது பலருக்கும் சப்ரைசாக இருக்கும். பார்வை குறைபாடு உள்ள சூர்யா நஸ்ரியா எப்படி இருப்பார் என்று கேட்பார். அதற்கு நஸ்ரியா தன்னை பற்றி ஒவ்வொரு விஷயமாக சொல்லிக் கொண்டிருக்க, தன்னுடைய மன கண்ணில் சூர்யா சில உருவத்தை இமேஜ் செய்வார். கடைசியில் அது ஜோதிகாவாக தெரியும். அதை பார்த்து சூர்யா புன்னகைப்பார். இந்த காட்சி தியேட்டரில் வந்த போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. அதனால் தனது நன்றி பதிவில் படத்துக்கு கிடைத்த வரவேற்பு பற்றி பேசும்போது ஜோதிகாவையும், அவருடைய பயணத்தையும் ரசிகர்கள் கொண்டாடியதற்கு தனியாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

சூர்யா வெளியிட்ட பதிவு
சூர்யா தனது பதிவில், "எல்லா துறைகளிலும், எல்லா திரை அரங்குகளிலும், எல்லா மொழிகளிலும் நீங்கள் கொடுத்த கைதட்டலுக்கும் அன்புக்கும் நன்றி. அவரையும், எங்களையும், எங்களுடைய இந்த பயணத்தையும் இவ்வளவு அன்போடு கொண்டாடியதற்கு மிக்க நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவுடன் ஜோதிகா படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
ஃபேவரிட் ஜோடி
சூர்யா ஜோடி என்றாலே ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். இருவரும் இணைந்து நடித்த படங்களையும், அவர்களுடைய திரை வெளியிலான காதல் பயணத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சீன் படத்தில் ஜோதிகா சிறப்பு தோற்றத்தில் வருவது ரசிகர்களுக்கு எதிர்ப்பாராத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக படத்தின் ப்ரோமோஷனில் இந்த காட்சி குறித்து பெரிய அளவில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.

ஜோதிகா என்ட்ரி
படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்களுக்கு இது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அந்த காட்சி மீண்டும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். சூர்யா தனது பதிவில் ஜோதிகாவை மட்டும் குறிப்பிட்டு நன்றி சொல்லவில்லை. படத்தையும் தங்களுடைய பயணத்தையும் ரசிகர்கள் கொண்டாடியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஒரு நடிகரின் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அவருடைய குடும்பத்தினரையும் சேர்த்து கொண்டாடும் அளவுக்கு மாறி இருப்பது இந்த பதிவில் அழகாக தெரிகிறது.
சீன் படத்தின் வசூல்
அது போல சீன் படத்தின் வசூல் கணக்கை பொறுத்தவரை சாக்னிக் வெளியீட்டுள்ள தகவலின் படி, முதல் 10 நாட்களில் படம் உலகம் முழுவதும் சுமார் 242.05 கோடி வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் நிகர வசூல் 136.50 கோடியாகவும், இந்திய மொத்த வசூல் 158.55 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 11வது நாளான நவம்பர் 16ஆம் தேதி இந்தியாவில் மட்டும் 2. 23 கோடி நிகர வசூல் கிடைத்துள்ளதாக சாக்னிக் கூறி இருக்கிறது.
வைரலாகும் பதிவு
இதன் மூலம் இந்திய நிகர வசூல் 138.73 கோடியை தொட்டுள்ளது. இந்த ஆண்டில் சூர்யா நடித்த படங்களில் சீன் உலகளாவிய வசூலில் முன்னிலை பெற்று இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் படத்துக்கு கிடைத்த வரவேற்பும், வெளிநாட்டு வசூலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒரு படத்தின் நடிகரின் நடிப்பையும், சண்டைக் காட்சிகளையோ ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கே சூர்யாவுடன் ஜோதிகா வந்த சில நிமிடங்களையும் ரசிகர்கள் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடி இருப்பது இந்த ஜோடிக்கு இருக்கும் வரவேற்பை காட்டுகிறது. இதனால் தான் சூர்யாவின் நன்றி பதிவு இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
