நாகையில் மகளுக்கு வீட்டை எழுதி வைத்த 83 வயது மூதாட்டி.. மகன்கள் மீது கலெக்டரிடம் கண்ணீருடன் புகார்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி பிரேமாவதி என்பவர், இன்று நாகப்பட்டினம் கலெக்டர் பிரவீன்குமாரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்தார். அவரது இரண்டு மகன்கள் அடித்து துன்புறுத்துவதாக கலங்கியபடி கலெக்டரிடம் மனு அளித்தார்.இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி பிரேமாவதி. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் ருத்திராபதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு செந்தில்குமார், உதயக்குமார் என்ற இரண்டு மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

Nagapattinam

மூதாட்டி குற்றச்சாட்டு

இந்நிலையில், தனது இரண்டு மகன்களும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக மூதாட்டி பிரேமாவதி குற்றம் சாட்டியுள்ளார். மகன்களுக்குத் தேவையான பணம் மற்றும் பொருளுதவிகளைத் தன்னால் இயன்ற அளவிற்கு வழங்கியதாகவும், தனது வீட்டை மகள் மீனாட்சி பெயருக்கு மாற்றியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன்கள் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் மல்க புகார்

இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பிரேமாவதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். தனது வீட்டை மீட்டுத் தருவதுடன், மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 83 வயதில் பெற்ற மகன்களிடமே பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் தஞ்சமடைந்துள்ள மூதாட்டியின் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டம் சொல்வது என்ன

இந்தியாவில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் இந்தியாவில் வலுவாக இருக்கிறது. வயதான பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர்களால் கைவிடப்படாமல், உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கண்ணியமாக வாழ்வதை உறுதி செய்வது தான் இந்த சட்டத்தின் அடிப்படை விஷயம் ஆகும்.

பராமரிப்பு தொகை

வயதான பெற்றோர்கள் தங்களது வருமானம் அல்லது சொத்துகள் மூலம் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களின் மகன், மகள் உள்ளிட்ட பிள்ளைகள் பராமரிக்க வேண்டியது சட்டப்பூர்வ கடமை ஆகும். பெற்றோரைப் பராமரிக்க பிள்ளைகள் மறுக்கும் பட்சத்தில், பெற்றோர் பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகி மாதாந்திர பராமரிப்புத் தொகை கோர முடியும்.

சிறை தண்டனை

பெற்றோர் தங்களது சொத்தை பிள்ளைகளுக்கு வழங்கிய பின்னர், அவர்களைப் பராமரிக்காமல் கைவிட்டால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அந்த சொத்து மாற்றத்தை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு. அதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரை அணுகி நிவாரணம் பெற முடியும். அதேபோல் மூத்த குடிமக்களை வேண்டுமென்றே கைவிடுடும் பிள்ளைகள் சிறைக்கு தான் போவார்கள். 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+