22 வயது லெக் ஸ்பின்னரை குறி வைத்த சிஎஸ்கே.. தோனி கொடுத்த அட்வைஸ்.. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் சத்தா என்ற இளம் லெக் ஸ்பின்னரை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்று கருதப்படுகிறது. சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக இருந்துள்ள கார்த்திக் சத்தா, தோனி உடனான உரையாடல், பவுலிங் குறித்த மொத்த பார்வையையும் மாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்காக சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான், கேகேஆர் மற்றும் லக்னோ அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பேட்டிங் பிரச்சனையை சரி செய்துவிட்டது. ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கின்றனர்.

CSK

தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் தீபக் சஹரை சிஎஸ்கே அணி நிச்சயமாக குறி வைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பதை தீபக் சஹர் நன்றாக அறிவார். கலீல் அஹ்மத் ஐதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுவிட்டார்.

இதனால் முகேஷ் சவுத்ரி மற்றும் தீபக் சஹரை வைத்து அட்டாக்கை தொடங்கினால், அது சிஎஸ்கே அணி மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும். அதேபோல் நூர் அஹ்மத், அகீல் ஹொசைன் மற்றும் ஓவர்டன் ஆகியோரை வைத்து மிடில் மற்றும் டெத் ஓவர்களை சிஎஸ்கே அணியால் சமாளிக்க முடியும். இருப்பினும் லிவிங்ஸ்டன் இருப்பதால், நூர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோரில் ஒருவரை மட்டுமே சிஎஸ்கே அணியால் விளையாட முடியும்.

இதனால் ஒரு இந்திய ஸ்பின்னரின் அவசியம் கட்டாயமாகி இருக்கிறது. அந்த இடத்தில் விளையாட சிஎஸ்கே அணி கார்த்திக் சத்தா என்பவரை டிரையல்ஸ்க்கு அழைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் சத்தா, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஏற்கனவே 2025 சீசனில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக இருந்து தோனியின் விக்கெட்டையே கைப்பற்றியவர் தான். அப்போது தோனி அவரிடம், உன்னிடம் எவ்வளவு வித்தியாசமான பந்துகள் உள்ளது என்பது ஒரு விஷயம் இல்லை.. உன்னால் நினைத்த லெந்தில் பந்தை பிட்ச் செய்ய முடிகிறதா என்பதே முக்கியது என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். எகனாமிக்கலாக பந்துவீசக் கூடிய கார்த்திக் சத்தா, இம்முறை பல்வேறு அணிகளால் குறி வைக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி அவரை ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+