அருள் விக்னேஷ், ரவிசங்கர்.. தவெகவின் 2 எம்எல்ஏ-வையும் கைது பண்ணுங்க! டிஜிபியிடம் மனு கொடுத்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளார். பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் அருள் விக்னேஷ்-யும், மனு கொடுக்க வந்தவரை தாக்கிய விவகாரத்தில் ரவிசங்கரையும் கைது செய்ய கோரியுள்ளார்.

தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பெண் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், குடித்துவிட்டு ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Udhayanithi Stalin

ஜூலை மாதமே அருள் விக்னேஷ் மீது இந்த புகார் எழுந்துவிட்ட சூழலில், 116 நாட்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபக்கம் துணை சபாநாயகர் ரவிசங்கர் அவரது வீட்டிற்கு மனு கொடுக்க வந்த நபரை அடித்தார். கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் அவரை மிரட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட வைத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த இரு விவகாரத்திலும் தவெக எம்எல்ஏ-க்கள் அருள் விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

துணை சபாநாயகர் விவகாரம் நடந்து 16 நாட்களாகிவிட்ட சூழலில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே அதிமுக தரப்பில் சட்ட ரீதியாக தவெக அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். அதிமுக சார்பாக போடப்பட்ட வழக்கின் காரணமாகவே அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

தற்போது திமுக துணை சபாநாயகர் விவகாரத்தையும் கையில் எடுத்து டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளது. இதனால் தவெகவுக்கு எதிராக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சாட்டையை சுழற்ற தொடங்கி இருக்கின்றன. இதனால் முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+