அடுத்த ஒன்றரை ஆண்டு மகர ராசிக்கு அதிரடி மாற்றம்.. எதிரிகளை வீழ்த்தும் நேரம்.. இந்த விஷயத்தில் உஷார்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது மகர ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசியினருக்கு ராகு கேது வருவதே உங்கள் ராசிக்குள்ளும், லக்னத்திற்குள்ளும் தான். மகர ராசி வீட்டில் தப்பு செய்தார்களோ, உங்களுக்கு அவமானம் கொடுத்தவர்கள், முதுகில் குத்தியவர்கள், துன்புறுத்தியவர்களை காட்டிக் கொடுக்கக்கூடிய தருணமாக இருக்கும். ஆனால், சண்டை போடாமல் இருப்பது நன்மை பயக்கும். நீங்கள் செய்யும் காரியத்தை முதலிலேயே சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. செய்து முடித்துவிட்டு சொல்வதே நன்மை பயக்கும்.

rahu-ketu-peyarchi-2026-magaram-rasi-people-will-get-huge-success-in-this-period

பொறுமை அவசியம்

நான் என்பதை மகர ராசியினர் இந்த காலகட்டத்தில் கொண்டு வரக்கூடாது. வரட்டு கெளரவத்திற்காக சில செயல்களைத் தவிர்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். தியானம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவி வழி சொந்தங்கள், பெரியவர்கள், பெண்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

கேது சந்திரன் வீட்டிற்கு வருவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை, இடதுபுற மார்பில் பிரச்சனை, மார்பகப் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. மகர ராசி பெண்களுக்கு கணவரின் வீட்டில் உள்ள மூத்த பெண்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால், வரும் ஒன்றரை வருடங்கள் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பார்ட்னர்ஷிப்பில் பிரிவு வருவதற்கான வாய்ப்புள்ளது.

யோகம்

அயல்நாட்டில் இருந்து, வேற்று மொழி, மதம், இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நமக்கும் தொழில் ரீதியான தொடர்புகள் ஏற்படும். கணவனாக இருந்தால் மனைவியின் உறவிலும், மனைவியாக இருந்தால் கணவரின் உறவிலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். கடுமையான செலவுகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

மாற்றம்

வேறு ஊருக்குச் செல்வது நன்மையைத் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம், இடமாற்றம் செய்வது உங்களுக்கு நன்மையைத் தரும். சந்தோஷம் 75 சதவீதம் நன்றாக இருக்கும். அதேபோல, ராகு கேது வருவதால் பெரிய மனிதர்களின் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். பெரிய முதலீடுகளை செய்வீர்கள். பெரிய பெரிய வேலை, பொறுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நிதி சார்ந்து நல்ல வளர்ச்சிகள் ஏற்படும். அதீத சிந்தனை இருப்பதால் கவனம் தேவை.

வழிபாடு

பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். அய்யனார் வழிபாடு, முனீஸ்வரர் வழிபாடு சகலவித ஏற்றங்களையும் அள்ளிக் கொடுக்கும். கனக துர்க்கை வழிபாடு அபாரமான மாற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+