தாத்தா சொத்து பேரனுக்கு தானாக வந்து சேராது.. சென்னை நில வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாத்தா பெயரில் இருந்த சொத்து என்பதற்காகவே பேரனுக்கு அதில் பங்கு கிடைத்துவிடாது. தந்தை உயிருடன் இருக்கும்போது, தாத்தாவிடம் இருந்து தந்தைக்கு வந்த சொத்தில் பேரன் பிறப்புரிமை கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கில்.. இந்து வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த மறைந்த என். ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. கடந்த 1993ஆம் ஆண்டு, ராமகிருஷ்ணனின் மகள் குடும்ப சொத்துகளை வாரிசுகளுக்கு பிரித்து தரக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 1994 பிப்ரவரி 3ஆம் தேதி நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட சமரசத்தின்படி, 1811 சதுர அடி நிலம் அவரது மகன் குமரனுக்கு ஒதுக்கப்பட்டது.

Supreme Court on property dispute

பின்னணி

பின்னர் 1997 ஏப்ரல் மாதம் குமரன் அந்த நிலத்தை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்தார். இதை எதிர்த்து, அவரது மைனர் மகனான ஜே. ராஜேஷ், தனது தாய் ஜே. கோமதி மூலம் நீதிமன்றத்தை அணுகினார். தாத்தாவுக்கு சொந்தமான சொத்து என்பதால், இந்து கூட்டு குடும்பத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கு அதில் பாதி பங்கு கிடைக்க வேண்டும் என்று கோரினார்.

முதலில் விசாரணை நீதிமன்றம் பேரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. ஆனால், 2010 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து ராஜேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2026 நவம்பர் 6ஆம் தேதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

தானாக வராது

இந்த வழக்கில் இந்து வாரிசுரிமை சட்டம் 1956ன் பிரிவு 8ஐ உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. உயில் எழுதாமல் ஒருவர் இறந்தால், அவருடைய சொத்துகள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை இந்த பிரிவு விளக்குகிறது. அதன்படி தந்தை உயிருடன் இருக்கும்போது, தாத்தாவின் சொத்தில் பேரன் நேரடியாக முதல் வாரிசாக (Class I heir) உரிமை கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. தாத்தாவிடம் இருந்து பிரிவு 8ன் கீழ் தந்தைக்கு வாரிசாக கிடைக்கும் சொத்து, அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அது தானாகவே கூட்டுக் குடும்ப சொத்தாக மாறாது. எனவே, தந்தையின் குழந்தைகளுக்கு அதில் பிறப்புரிமை அடிப்படையில் பங்கு கிடையாது.

மேலும், ஏற்கெனவே சொத்து பிரிவினை நடைபெற்றுவிட்டதால், கூட்டு குடும்ப சொத்தில் பங்கு பிரிவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் கூறியது. தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சட்டத் திருத்தத்தின் பிரிவு 29-Aவும் இந்த வழக்கில் பொருந்தாது என தீர்ப்பளித்தது.

வல்லுநர்கள்

இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இந்த தீர்ப்பை வைத்து கொண்டு பேரக்குழந்தைகளுக்கு குடும்ப சொத்தில் ஒருபோதும் உரிமை கிடையாது என நாம் எடுத்து கொள்ள தேவையில்லை.. தாத்தாவிடம் இருந்து சொத்து எப்படி கிடைத்தது என்பதுதான் முக்கியம்" என்றும் விளக்கினார். இந்து வாரிசுரிமை சட்டம் 1956 அமலுக்கு வந்த பிறகு, தந்தை உயிருடன் இருக்கும்போதே தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை கோரும் பழைய சட்டத்தில் மாற்றம் வந்துள்ளதாக மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஜான்வி கோலி தெரிவித்தார்.

எனவே, ஒரு சொத்து தாத்தாவுக்கு சொந்தமாக இருந்தது என்ற ஒரே காரணத்துக்காக பேரன் அதில் பங்கு கேட்க முடியாது. அந்த சொத்து எந்த சட்டத்தின் கீழ், எந்த வழியில் தற்போதைய உரிமையாளருக்கு வந்தது என்பதை பொறுத்தே வாரிசுரிமை தீர்மானிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+