கருகுது டெல்டா.. வாடும் விவசாயிகள்! பொறுப்பில்லாத தவெக அரசு.. சிஎம் மீது திமுக பரபர குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பொறுப்பில்லாத, திட்டமிடல் இல்லாத அரசின் அணுகுமுறை காரணமாக தமிழ்நாட்டிற்கு படி அளந்த விவசாயிகளின் நிலைமை மாட்டிற்கு கூட தீவனம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும், கர்நாடக அரசிடம் த.வெ.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தி இங்குள்ள விவசாயிகளுக்கு குறை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 20-60 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத நிலை காணப்படுகிறது.

Trichy Siva

வடகிழக்கு மண்டலம், காவேரி டெல்டா மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.

திருச்சி சிவா

பல இடங்களில், விளை நிலங்கள் வெடித்து பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு உள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில் திருச்சி சிவா தலைமையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மாநில விவசாய அணி செயலாளர் ஏ கே எஸ் விஜயன் மக்களவை உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் முரசொலி ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி கிராமத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

காவிரி டெல்டா

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி சிவா," இன்றைக்கு உள்ள அரசு தவறான நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டதால், மக்களுக்கு பயன்பட வேண்டிய நேரத்தில் பயன்படாமல் பயிர்கள் காய்ந்து மாட்டிற்கு கூட தீவனம் இல்லாத வேதனையான நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

தவெக அரசு

கர்நாடக அரசிடம் த.வெ.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தி இங்குள்ள விவசாயிகளுக்கு குறை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்காரணத்தைக் கொண்டும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. தமிழ் நாட்டிற்கே படி அளந்த விவசாயிகளின் நிலைமை, தற்போது அவர்களது மாட்டிற்கு கூட தீவனம் இல்லாமல் தவிக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

டெல்டா விவசாயிகள்

இதற்கு காரணம் பொறுப்பில்லாத திட்டமிடாத அரசினுடைய அணுகுமுறை தான். விவசாயிகள் கருத்தை அரசு கேட்டு அறிந்திருக்க வேண்டும். தேவை என்ன என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். அனுபவத்தின் மூலமாகவும் எதுவும் தெரியவில்லை. அடுத்தவர் மூலமாக அறிந்து கொள்ளவும் முயலவில்லை. தற்போது பெய்கிற மழை எதற்கும் உதவாது.

விவசாயிகள் பாதிப்பு

பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அறிக்கையாக தயார் செய்து தலைமைக்கு கொடுக்கப்படும். மாய தோற்றத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விட்டார்கள் மக்கள் தேவை என்பதை அறியாதவர்கள். விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+