"பாகிஸ்தானியர்கள் போல் உடை கட்டாயம்".. பாக்., பிரபலமான Dar-e-Nijaat ‘டிராமா' பெங்களூரில் ரத்து
பெங்களூர்: பாகிஸ்தானில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர் Dar-e--Nijaat'-யை அனைவரும் ஒன்று சேர்ந்து பார்க்கவும், அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று கூறி பெங்களூரில் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து 2 நிகழ்ச்சிகளும் தற்போது ரத்தாகி உள்ளது. இந்த தொலைக்காட்சி தொடரின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் Dar-e-Nijaat எனும் தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமாக உள்ளது. இது நம் நாட்டிலும் அதிகமானவர்களை கவர்ந்துள்ளது. காதல், காதலில் ஏற்படும் மனக்காயம், அதில் இருந்து மீண்டு வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தொடர் அமைந்துள்ளது.
நம் நாட்டில் அதிகமான இளம்பெண்கள் பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் Dar-e-Nijaat தொடரை பெங்களூரில் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்க
'வாட்ச் பார்ட்டி' ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி பிரேசர் டவுனில் நவம்பர் 28 ம் தேதி மாலை 6 மணிக்கு 'The Bloom Society Sister's Club' சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது. Dar-e-Nijaat தொடரின் 34, 55 காட்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி பெர்ஷியன் மற்றும் அரபிக் டின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் The Star Club சார்பில் டிசம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு தியேட்டரில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் பாகிஸ்தானியர்களை போல் உடையணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த 2 அமைப்புகளும் தங்களின் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு புரோமேஷன் செய்யும் வேலையில் ஈடுபட்டன. இதற்கு ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தான் நாட்டின் திரைப்படங்கள், சீரியல் தொடர்கள், குறும்படங்களை நம் நாட்டில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த தொடர்களை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என பெங்களூர் போலீசாருக்கு சமூக வலைதளங்கள் வழியாக புகாரளித்தனர்.
A fan gathering and special watch party for the Pakistani drama Dar-E-Nijat is scheduled to take place on November 28 at Sheesh Kebab, Frazer Town, Bengaluru. The event will include snacks and a Persian/Arabian dinner, with an entry fee of ₹1,999 per person.Another fan gathering and screening of Dar-E-Nijat will take place on December 5 at Mowie Private Theatre in Bengaluru. Fans have been asked to wear "PAKISTANI ENSEMBLES" as the official dress code. Bookings for both regular and VIP seats are currently open.The organisers are screening Pakistani dramas, encouraging people to idolise Pakistani characters and even promoting the idea of wearing PAKISTANI OUTFITS.
— Anviksha (@Anviksha_) November 24, 2026
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதுபற்றி இன்று பெங்களூர் நகர மாநகர காவல் ஆணையர் ஹிதேந்திரா கூறுகையில், ''தற்போதைக்கு 2 அமைப்பினர் இதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதனால் கூடுதல் விவரங்களை அறிய நாங்கள் ஏற்பாட்டாளர்களுடன் பேச உள்ளோம். தொடர்பில் இருக்கிறோம். களத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அது செய்யப்படும்'' என்றார்.
அதன்பிறகு போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக இருதரப்பும் அறிவித்துள்ளது. இதன்மூலம் சர்ச்சை ஓய்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications
