செந்தில் பாலாஜியை குற்றவாளியாக கருதக்கூடாது! அரசு வேலைக்கு பணம் வழக்கில்.. உச்சநீதிமன்றம் கருத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு வேலைக்கு பணம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்றும், அவரை விசாரிக்காமல் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்த பண மோசடி தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Supreme Court Senthil Balaji Cash for Jobs Case Senthil Balaji Cash for Jobs Case

வழக்கு

இந்த வழக்கில் அவர் கைதாகி சிறையில் இருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாகதால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நவம்பர் 26, 28 ஆகிய தேதிகளில் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கபில் சிபல் குறிப்பிட்டார்.

காரசார வாதம்

உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்பதே அவரது வாதமாக இருந்தது. ஆனால், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா பத்மநாபன், அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வழக்கு பட்டியலிடப்படவில்லை என்று மறுத்தார். இதையடுத்து வழக்கை ஒத்திவைப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாதம் நடைபெற்றது.

குற்றவாளியாக கருதக்கூடாது

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், "குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருக்கலாம். ஆனால், ஒருவரது தரப்பு வாதத்தைக் கேட்காமல் அவரை குற்றவாளியாக கருதக் கூடாது" என்றார். அதாவது செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பே தீர்ப்பளிப்பது போன்ற அணுகுமுறை இருக்கக் கூடாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

வேதனை

நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மேலும் கூறுகையில், "இந்த வழக்குகள் 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை. இப்போது 2026ஆம் ஆண்டு என்பதால், அடுத்த விசாரணை தேதியை சில நாட்கள் ஒத்திவைப்பதால் வானம் இடிந்து விழுந்துவிடாது. மேலும், ஆட்சி மாறும்போது குற்றவியல் வழக்குகளை நடத்தும் விதமும் வேகமும் மாறுவது நீதித்துறை நிர்வாகத்தின் மோசமான அம்சம். ஒரே வழக்கை ஒரு அரசு மெதுவாக நடத்துகிறது; மற்றொரு அரசு வேகமாக நடத்துகிறது. வழக்குகளை நியாயமான முறையில் நடத்துவதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

இறுதியில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணையை வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதவது செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வரை கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நடக்காது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+