ஜென்சன் ஹுவாங்கை மட்டுமில்லை, எலான் மஸ்க்கை காப்பாத்துனதும் நான்தான்.. டிரம்ப் தம்பட்டம்
வாஷிங்டன்: என்விடியா சிஇஓ ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்குமாறு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க்கையும் முந்தைய ஆட்சி காலத்தின் போது சிக்கலில் இருந்து காப்பாற்றியிருப்பதாக கூறியுள்ளார். அதேவேளையில் எலான் மஸ்க் சந்தித்த பிரச்சினை என்ன என்பது பற்றி அவர் வெளிப்படையாக கூற மறுத்துவிட்டார்.
சீன உளவாளி பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த சர்ச்சையில் சிக்கிய என் விடியா சிஇஒ ஜென்சன் ஹூவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் என்விடியா பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. சீன பெண் உளவாளி மட்டுமின்றி மேலும் சில பெண்களுடன் ஜென்சன் ஹூவாங்கிற்கு ரகசிய தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

எலான் மஸ்க்கையும் நானே காப்பாற்றினேன்
தொடர் சர்ச்சைகளில் சிக்கினாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜென்சன் ஹூவாங்கிற்கு ஆதரவுக்கரம் நீட்டினார். இதன் தொடர்ச்சியாக என்விடியா இயக்குநர்கள் கூட்டத்தில் ஜென்சன் ஹூவாங்கை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஜென்சன் ஹூவாங் , தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதுமே, இதற்கு நானே காரனம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜென்சன் ஹூவாங் மட்டுமின்றி எலான் மஸ்க்கையும் நானே காப்பாற்றினேன் என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக முதல் முறையாக பதவி வகித்த கால கட்டத்தில், எலான் மஸ்க்கை தான் காப்பற்றியதாக கூறியிருக்கிறார்.
நான் மட்டும் காப்பாற்றாவிட்டால்..
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், நான் மட்டும் காப்பாற்றாவிட்டால் இன்று எலான் மஸ்க் இந்த நிலையில் இருந்து இருக்க மாட்டார் என்ற பொருளில் பேசினார். டிரம்ப் கூறியதாவது:- "நான் முதல் முறையாக அமெரிக்க அதிபராக இருந்த போது, சில விஷயங்கள் நடைபெற்றன. ஒரு கடினமான சம்பவம் அது" என்றார். ஆனால் அந்த அளவுக்கு கடினாமன சூழல் எது என்று டிரம்ப் வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டார்.
எலான் மஸ்க் சூப்பர் ஜீனியஸ் என்றும் 20 சதவீதம் அளவுக்கு வேறு பிரச்சினைகள் இருந்தாகவும் கூறினார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்புடன் பெரும் சிக்கலை எலான் மஸ்க் சந்தித்தார். அதற்கு அவர் வெளியிட்ட ஒரு ட்விட் காரணமாக அமைந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 420 டாலர் என்ற விலையில் பிரைவேட் ஆக மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.
20 மில்லியன் டாலர் அபராதம்
இந்த அறிவிப்பு பங்குச்சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த அறிவிப்பை எலான் மஸ்க் செயல்படுத்தவில்லை. அதன்பிறகு அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), எலான் மஸ்க் தனது கருத்துகளின் மூலம் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, மோசடி குற்றச்சாட்டைச் சுமத்தியது. அதன்பிறகு இரு தரப்பும் இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்துக்கொண்டனர். இதன்படி, 20 மில்லியன் டாலர் அபராதமும், டெஸ்லா தலைவர் பதவியில் இருந்து மூன்று ஆண்டுகள் விலகியும் இருந்தார்.



Click it and Unblock the Notifications
