Donald Trump: என்னால் தான் ஜென்சன் ஹூவாங்கிற்கு மீண்டும் பதவி கிடைத்தது.. கிரெடிட் எடுத்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஜென்சன் ஹூவாங் மீண்டும் என்விடியா சிஇஓவா ஆனதற்கு நானே காரணம் என்று மொத்த கிரெடிட்டையும் எடுத்துக்கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதே போல, தனியார் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் முடிவில் தலையிட்டது ஏன்? என்ற கேள்விக்கு, 'ஜென்சன் ஹுவாங்கை சீனா பணியமர்த்திவிடுமோ என்று அஞ்சியதாக' டிரம்ப் பதில் அளித்தார்.

ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நானே நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் டிரம்ப், தற்போது ஜென்சன் ஹூவாங் விவகாரத்திலும் நானே தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்து போல பேசியிருக்கிறார்.

சீனாவை சேர்ந்த பெண் உளவாளியான ஆலில் ஹூவாங் என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருந்த ஜென்சன் ஹூவாங், என்விடியா தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சீன உளவாளி பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த ஜென்சன் ஹூவாங்க்கின் செயல், தேச பாதுகாப்புக்கு எதிரானதாக இருக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஜென்சன் ஹூவாங் இந்த முடிவை எடுத்தார்.

Donald Trump Claims he personally persuaded Nvidia board to reinstate Jensen Huang

என்விடியா சி.இ.ஓவாக ஜென்சன் ஹூவாங் நியமனம்

அதனை என்விடியாவின் போர்டு இயக்குநர்கள் குழுவும் ஏற்றுக்கொண்டது. எனினும், ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இந்த நிலையில் ஜென்சன் ஹூவாங் பதவியை ராஜினாமா செய்த வெறும் 11 நாட்களில் மீண்டும் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜென்சன் ஹூவாங் உடனடியாக என்விடியா தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஜென்சன் ஹூவாங் மீண்டும் என்விடியா பொறுப்புக்கு திரும்பிய மறுநிமிடமே அமெரிக்க பங்குச்சந்தைகளில் என்விடியா பங்குகள் ஏற்றம் கண்டன. அதன் பங்குகள் சுமார் 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

சிஇஓவா ஆனதற்கு நானே காரணம்

என்விடியா தலைமை செயல் அதிகாரியாக ஜென்சன் ஹூவாங் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு இருப்பது நிறுவனத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் நல்லது என்று டிரம்ப் புகழ்ந்து இருந்தார். இந்த சூழலில், அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த டிரம்ப், ஜென்சன் ஹூவாங் மீண்டும் என்விடியா சிஇஓவா ஆனதற்கு நானே காரணம் என்று மொத்த கிரெடிட் (பெருமை)டையும் எடுத்துக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

என்விடியா இயக்குநர்கள் குழுவிடம் நான் பேசினேன். அவர்களை நான் தான் சம்மதிக்க வைத்தேன். ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவினருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசினேன் என்றார். மேலும், தனியார் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் முடிவில் தலையிட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை சீனா பணியமர்த்திவிடுமோ என்று அஞ்சினேன்' என்றார்.

7 போர்களை நிறுத்தியதாக

என்விடியா சிஇஓவாக ஜென்சன் ஹூவாங் நியமனம் ஆகியிருப்பதாக அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நான் தான் நிறுத்தினேன் என்று தம்பட்டம் அடித்து வரும் டிரம்ப், தற்போது ஜென்சன் ஹூவாங் விவகாரத்திலும் நானே தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்து போல பேசியிருப்பது சமூக வலைத்தளங்களிலும் பலராலும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+