இந்துக்களுக்கும் சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கு.. விஜய் அரசுக்கு பாராட்டுகள்! ஓபனாகப் பேசிய திருமா!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக ஆட்சியின் போதும் தமிழக வெற்றி கழக ஆட்சியின் போதும் இரண்டு அரசுகளும் எடுத்து இருக்கிற முடிவு காலம் காலமாக எடுத்த முடிவு தான் எனவும், இந்துக்களுக்கும் சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது என கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் மதுரை உலக தமிழ்ச் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், திமுக எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட ஆயிரக்கானோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய திருமாவளவன்," பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறைக்கு முதலில் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன். மறுத்திருந்தாலும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தாலும் நாங்கள் களத்திற்கு வந்திருப்போம். கைதாகி இருப்போம்.

Thirumavalavan

திருமாவளவன்

அரசு எடுத்திருக்கிற நிலைப்பாட்டை ஆதரிக்கிற வகையில் தான் எங்கள் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மாறினாலும் கூட அரசின் நிலைப்பாடு மாறவில்லை. அரசு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக ஒரு முடிவை எடுக்குமா? இந்த நிலைப்பாட்டை எடுக்குமா என்ற கேள்வியை எழுப்பி பார்க்க வேண்டும். இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்பது அல்ல.. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிற பாரம்பரிய நடைமுறை எதுவோ? அந்த நடைமுறைக்கு ஏதுவாக அரசு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

தவெக ஆட்சி

திமுக ஆட்சியின் போதும் சரி, இன்றைக்கும் சரி, இரண்டு அரசு தரப்பைச் சார்ந்தவர்களும் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிற முடிவு காலம் காலமாக வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது தான் நடைமுறை. புதிதாக இன்னொரு இடத்திலே தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது இல்லை அரசு நிலைப்பாடு.

இந்துகள் சங்கிகள்

இந்துகளுக்கும் சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. பல ஆண்டுகளாக நூறு ஆண்டுக்கு மேலாக நீடிக்கிறது அப்போது சங்கிகள் இருந்தார்களா என்றால் இல்லை. நூறாண்டுக்கு முன்பு இந்த பிரச்சனை இருந்தது. அதான் பிரச்சனை என்னவாக இருந்தது என்றால் அங்கே போய் தீபம் ஏற்றுவோம் என்று இல்லை. நில உரிமை தொடர்பான பிரச்சனையாக இருந்தது. அங்கே மலை உச்சியில் தர்கா இருக்கிறது. மசூதி இருக்கிறது.

பிள்ளையார் கோவில்

மலையடிவாரத்தில் இருந்து தர்காவுக்கு போகவேண்டும் மசூதிக்கு போக வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் போவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன. அதேபோல மலையின் நடுப்பகுதியில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயில் இருக்கிறது. அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் படிக்கட்டு தேவை. ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் ஒரே படிக்கட்டில் எல்லோரும் போக வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு இரண்டாக பிரியும். ஒன்று கோவிலுக்கு போகிற பாதை.

தர்கா நிலவு

இன்னொன்று மேலே ஏறி தர்காவுக்கு போகிற பாதை. இதுதான் மலை. அந்த மலை 172 ஏக்கர் பரப்பு பரப்பளவு உள்ளது. இந்த 172 ஏக்கரில் கோயிலுக்கு நிலம் எவ்வளவு சொந்தம் தர்காவுக்கு நிலவு எவ்வளவு சொந்தம் மிச்சம் இடம் யாருக்கு சொந்தம். அந்த இடங்களுக்கு தற்கால பெயர் சூபிக்களின் நல்லடக்கம் செய்த இடம். அங்கே ஒருவரை சிக்கந்தர் பாதுஷா என்பவரை அடக்கம் செய்து இருக்கிறார். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அவரை அடக்கம் செய்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு.

திருப்பரங்குன்றம் தீபம்

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மசூதியில் எழுப்பப்பட்டிருக்கிறது. அதை சுற்றியுள்ள பகுதியும் அந்த பகுதிக்கு செல்ல இருக்கிற படிக்கட்டுகளும் இஸ்லாமியர்களுக்கு சொந்தம். சிறப்புக்குரிய மலை குன்று. அது இப்போது ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா தொல்லியல் துறை அவர்கள் என்ன கூறுகிறார்கள். கோயில் நிர்வாகத்திற்கு அது இருக்கிற தீப மண்டபம் உச்சிப் பிள்ளையார் கோயில். இந்த இடம் போக எஞ்சிய பகுதி ஆர்க்கியாலஜி என்கிற தொல்லியல் துறைக்கு சொந்தமானது. அப்போதெல்லாம் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான பிரச்சினையே கிடையாது என்று சொல்லப்படுகிறது. இந்த தூணை பற்றிய சிக்கலே இல்லை. இந்த பிரச்சினையை இந்து முன்னணியை சார்ந்தவர்கள் தான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+