எண்ட் கார்டா போடுறீங்க.. 11 நாளில் நடந்த ட்விஸ்ட்! என்விடியா சிஇஓவாக ஜென்சன் ஹூவாங் மீண்டும் நியமனம்
வாஷிங்டன்: என்விடியா சிஇஒ ஜென்சன் ஹூவாங் சீன பெண் உளவாளி மற்றும் அலுவலக ஊழியருடன் கள்ள உறவில் இருந்தது அம்பலமானது. இதையடுத்து, தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜென்சன் ஹூவாங் விலகினார்.
எனினும், பதவி விலகி 11 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மீண்டும் அதே பொறுப்புக்கு ஜென்சன் ஹூவாங்கை நிறுவனத்தின் நிர்வாக குழு நியமனம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் ஜென்சன் ஹூவாங்கிற்கு ஆதரவுக்குரல் கொடுத்த நிலையில், இந்த புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தகவல் தொழில் நிறுவனமும் சிப் உற்பத்தியில் கொடி கட்டி பறந்து வரும் என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஜென்சன் ஹூவாங். இவர் சீன பெண் உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட பெண் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹூவாங், தனது குடும்பத்தினருடனும் மன்னிப்பு கேட்டு இருந்தார்.
இதற்கிடையே கள்ள உறவால், என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும் விலகினார். இருப்பினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பலரும் ஆதரவு தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்டு இருப்பதால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
எனினும் என்விடியா நிறுவனத்தின் நிர்வாக குழு எந்த கருத்தும் சொல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக என்விடியா நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக என்விடியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஜென்சன் ஹூவாங் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டது உடனடியாக அமலுக்கு வரும்.
இந்த முடிவை எடுக்கும் முன்பாக அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளுடனும் தகவல்களை நிர்வாக குழு பெற்றது. என்விடியாவுக்கு தலைமை தாங்க ஜென்சன் ஹூவாங்க்தான் சரியான நபராக இருப்பார் என்று நிர்வாக குழு நம்புகிறது. நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஊழியர்கள், கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜென்சன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் மீண்டும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜென்சன் பதவி விலகிய பிறகு, இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய கோலெட் கிரெஸ்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்விடியாவின் தலைமை நிதி அதிகாரியாக அவர் தொடர்ந்து பதவிகளை வகிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கேள்வி பட்டதுமே ஜென்சன் ஹூவாங்கும் உடனடியாக தனது தரப்பு பதிலை அளித்துள்ளார். ஜென்சன் ஹூவாங் கூறுகையில், என்விடியா நிறுவனத்தின் பொறுப்புக்கு மீண்டும் திரும்புவதில் நான் பெருமையாக உணர்கிறேன். இந்த பொறுப்பை நான் மிகுந்த பணிவுடனும், புதிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், இந்த முடிவை எடுப்பதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசத்திற்காகவும் நிர்வாக குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
