திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகில் இருப்பது சர்வே கல்தான்.. தீபத்தூண் அல்ல- தமிழக அரசு ஆய்வறிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகில் இருப்பது தீபத் தூண் இல்லை, சர்வே கல்தான் என தெரிவித்து ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முதற்கட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 800 நில அளவை நிலையங்களில், சிக்கந்தர் மலை உட்பட 484 இடங்களில் சர்வே கற்கள் இருப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள கல் தூணில் நவம்பர் 24 ஆம் தேதி மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இடைக்கால அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

Thirupparankundram Tamil Nadu Government Releases Report Claiming Structure Near Dargah Is a Survey Stone

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அங்கு தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டாலும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிப்பது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதில் திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகில் இருப்பது தீபத் தூண் இல்லை, சர்வே கல்தான் என தெரிவித்து ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

முதற்கட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 800 நில அளவை நிலையங்களில், சிக்கந்தர் மலை உட்பட 484 இடங்களில் சர்வே கற்கள் இருப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆவணங்களில் 'சிக்கந்தர்மலை நில அளவீட்டு மையம்' என்றுள்ளது. தொல்லியல் துறை ஆய்வில் 484 நில அளவீட்டு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொல்லியல் துறை ஆய்வில் 57 தூண்களும் கண்டறியப்பட்டுள்ளன. DGPS தொழில்நுட்பம், டிரோன் ஆய்வு, வரலாற்று ஆவணங்களுடன் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு ஆங்கிலேயர் கால அளவீடுகளும், தற்போது மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளும் ஒத்துப்போவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+