திருப்பரங்குன்றம் Red Zone ஆக அறிவிப்பு! 5 ஆயிரம் போலீசார் குவிப்பு! வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு
மதுரை: கார்த்திகை தீபத்திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 எஸ்பிக்கள் தலைமையில் 5,618 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் உள்ள தீபத்தூண், நெல்லித்தோப்பு, மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தீபம் ஏற்றப்படுமா?
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை ஏற்று தீபத்துணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது மாற்று திட்டம் வைத்து இருக்கிறதா? என்று தற்போது வரை தெரியவில்லை. நாளை கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் என 2 தினங்களுக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சி உள்பட மலை முழுவதும் கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை, சாலை கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆய்வு
இந்த திருப்பரங்குன்றம் மலை பகுதியானது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக டிரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூண், நெல்லித்தோப்பு, மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் மலைக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் 12 எஸ்பிக்கள் தலைமையில் 5,618 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் தீபத்துண் பகுதியில் மட்டும் ஒரு எஸ்பி தலைமையில் 2 உதவி ஆணையாளர், 4 காவல் ஆய்வாளர்கள் என 187 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

" title="திருப்பரங்குன்றத்தில் தீபம்! புதிய வழியில் உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு! சாதகமாக அமையுமா?

Click it and Unblock the Notifications
