துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பணம், பதவி, சொத்து தேடி வரப்போகுது
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம், குருமங்கள யோகம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நரசிம்மரை வழிபாடு செய்வது யோக பலன்களைத் தரும். முதுக, கால், பாதங்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம் செய்வது மேன்மையைத் தரும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். எல்லா விஷயங்களிலும் பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். செல்வாக்குகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அற்புதமான யோகங்கள் உண்டாகும். லோன் அப்ளை செய்பவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு செய்வது நல்லது. வேலையில் சிறு சிறு குடைச்சல்கள் இருக்கும். வேலைக்காரர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிடித்த விஷயங்களை நேர்மையாகப் பேசக்கூடிய அமைப்பு ஏற்படும். 25, 26 ஆகிய இரு நாட்கள் செலவுகள், அலைச்சல்கள் இருக்கும். பெருமாள் வழிபாடு, பார்த்தசாரதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் மேன்மையைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தலைவலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் வீண் வாதம் செய்வது, தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது.
இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். செல்வாக்கு உயரும். தொழிலதிபர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்கள், கோப்புகள், கணக்கு வழக்குகளில் அதீத கவனமாக கையாளுவது, பார்த்துக் கொள்வது நல்லது. சகலவித சங்கடங்களும் தீரும். எதிரிகள், மேலதிகாரிகள் விஷயத்தில் நிதானம், அடக்கம் அவசியம்.
அடுத்த மாதம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கால் முட்டியில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. பணம் காசுகளை வெளியில் கொடுத்தால் மீண்டும் வராது. வேறு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. சந்தோஷமாக இருப்பீர்கள். விரயத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு சிறந்த பரிகாரமாகும். பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு யோக பலத்தைப் பெறக்கூடிய காலகட்டம். குருவின் ஆசிர்வாதம் பிரமாதமான அமைப்பைத் தரும். உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுவது யோகத்தைப் பெற்றுத் தரும். விநாயகர், துர்க்கை வழிபாடு செய்வது குடும்பத்தில் இருக்கும் ராகு கேது தோஷத்தில் இருந்து காப்பாற்றும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றுத் தரும்.
இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரண நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட தொழில், உத்தியோகம், சுபகாரியங்கள், இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். கால் வலி, வேதனை, கழிவுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பணம், காசுக்கு தட்டுப்பாடு இருக்காது. நண்பர்கள் வீட்டுக்கு வரிகை புரிவார்கள். வீடே சந்தோஷமாக இருக்கும். அடுத்த ஒருமாத காலம் பண்டிகைக் காலம் போல வீடே கோலாகலமாக இருக்கும். எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். நண்பர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். கணவனாக இருந்தால் மனைவிக்கு யோகம் ஏற்படும். கார் வாங்குவது, வீடு வாங்குவது, சொத்து வாங்குவது, வேலை கிடைப்பது போன்ற அமைப்பு உள்ளது.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். எல்லா காரியங்களிலும் ஜெயிக்கக்கூடிய காலகட்டம். எதை செய்தாலும் வெள்ளிக்கிழமை செய்வது யோகத்தைத் தரும். வெள்ளை, பச்சை நிற ஆடைகளை உடைத்துவது நன்மை, வெற்றியைத் தரும். நம்பிக்கை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. 25, 26 ஆகிய 2 நாள்கள் மட்டும் மன நிம்மதியின்மை, அதிக செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும். செய்யும் விஷயங்கள் தள்ளிப்போய் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் இரு நாட்கள் மட்டும் கவனம் தேவை. மற்றபடி வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவராக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கு யோகம் ஏற்படும.
எந்த முயற்சி செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை நன்றாகப் புரிந்து கொண்டு வேலை செய்தால் அற்புதமாக இருக்கும். லாபத்தில் அமர்ந்திருக்கும் சூரியனால் அரசு மூலமாக வரக்கூடிய சொத்துகள் வந்து சேரும். பணம் வந்து சேரும். எல்லாமே வரும் ஆனால் கொஞ்சம் தள்ளிப்போய் வரும். அடிவயிறு, கழிவுப் பாதை, இரவு நேரத்தில் உணவு சாப்பிடுவதால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும். நரசிம்மர் வழிபாடு பெரும் செல்வாக்கைத் தரும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற யோகம் ஏற்படும். பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் வரும் பஞ்சாயத்துக்கள் வரக்கூடிய டிசம்பர் 5 ஆம் தேதி முதல் மாறும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பாக்கிய ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. லட்சுமி நாராயணப் பெருமாள், அரங்காநதர் தாயார், ரங்கநாயகி அம்மாள் வழிபாடு அற்புதமான மாற்றத்தைத் தரும்.
10 ஆம் இடம் சிறப்பாக இருக்கிறது. வேலையில் சிறிய சிறிய பிரச்சனைகள், அவமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் கொடுக்காது. நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மெடிஷன் சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்வீர்கள். கல், கட்டுமானம், குவாரி, மணல், கட்டுமானம் செய்வது, அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது.
7 ஆம் இடம் வலுவிழந்து காணப்படுவதால் கெமிக்கல், ஆசிட், பினாயில், அகர்பத்தி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சிறு தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் ஏற்படும். வெளியிடம், குடும்பத்தில் வாக்கு கொடுக்காமல் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமான் வழிபாடு, சிவனுக்கு அபிஷேகம் செய்வது யோகத்தைத் தரும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அற்புதமான அமைப்பு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். மற்றவர்கள் உங்களுக்கு லாபமாக மாறுவார்கள். இதுவரை இருந்து வந்த குடைச்சல், தொந்தரவுகள், டென்ஷன் நீங்கக்கூடிய காலகட்டம்.
வயிறு உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அல்சர் வரும். வயிற்றில் கல், அஜீரண கோளாறு போன்றவை ஏற்படும். 25, 26 ஆகிய நாட்களில் மனக் குழப்பம் வரும். எடுத்த காரியங்கள் தள்ளிப்போகும். அதிகமாக செலவுகள் ஏற்படுவது, பணத்தை கொடுத்து சிக்குவது போன்ற சூழல் இந்த இரு நாட்கள் உள்ளாதல் கவனம் தேவை. பயணம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு.
அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன், புதன் திடீர் வளர்ச்சியைக் கொடுப்பார். எதிர்பார்க்காத பண வரவு, திருப்தி, லாபம், மன சந்தோஷம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. 5 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். காமாட்சியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
